top of page
Anchor1

1

எழுதப்பட்டுள்ள தேவ வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமத்தில் “பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு” என்னும் இரு பகுதிகள் உள்ளன. பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட தேவனுடைய பரிசுத்தவான்கள் அந்த ஆவியானவரின் ஏவுதலினால் அவற்றைப் பேசி, எழுதிவைத்துள்ளனர். இவ்வார்த்தைகள் மூலமாக, இரட்சிப்பிற்குத் தேவையான அறிவை மனிதனுக்குத் தேவன் தருகிறார். தேவசித்தத்தை வேதாகமம் தெள்ளதெளிவாக வெளிப்படுத்துகிறது. நம் குணத்தை அளந்துப்பார்க்கிற தரகோல் வேதாகமமே. அது நம் வாழ்க்கையின் அனுபவங்களைப் பரிசோதிக்கின்றது; கோட்பாடுகளை அதிகாரத்தோடு வெளிபடுத்துகின்றது. வரலாற்றில் தேவன் செய்த சில முக்கியமான செயல்களை வேதாகமம் பதிவு செய்துள்ளது. வேதாகமத்தை முழுவதும் நம்பலாம்.

 

சங் 119:105; 1தெச 2:13; நீதி 30:5,6; 2தீமோ 3:16,17; ஏசா 8:20; எபி 4:12; யோவான் 17:17; 2பேதுரு 1:20,21

பரிசுத்த வேதாகமம்

Anchor2

2

தேவன் ஒருவரே. சம நித்திய தன்மை உடைய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரின் ஒருங்கிணைப்பே தேவன். தேவன் அழியாமை உள்ளவர்; சர்வ வல்லமை உள்ளவர், சர்வ ஞானம் உள்ளவர். எல்லாவற்றுக்கும் மேலாக, என்றும் இருக்கிறவர்; எல்லை இல்லாதவர். அவரை புரிந்துகொள்ளும் திறன் மனிதருக்குத் தம்மில்தாமே இல்லை. ஆனாலும், அவருடைய சுயவெளிப்பாட்டின் மூலம் அவரை அறிந்துகொள்கிறோம். தொழுகை, போற்றுதல், சேவை ஆகியவற்றைத் தம்முடைய சகல சிருஷ்டிகளிடமுமிருந்து பெற அவரே தகுதியுடையவர்.

 

உபா 6:7; 1தீமோ 1:17; மத்தேயு 28:19; 1பேதுரு 1:2; 2கொரிந்தியர் 13:13,14; வெளிப்படுத்தல் 14:7; எபேசியர் 4:4-6.

திரித்துவம்

Anchor 3

3

சிருஷ்டிகள் அனைத்தையும் படைத்து, அவைகளின் தவக்கமாயிருந்து, அவர்களை ஆதரித்து, ஆளுகைசெய்கின்றவர் நித்திய பிதாவாகிய தேவனே. அவர் நீதியும் பரிசுத்தமும் உள்ளவர்; இரக்கமும் கிருபையும் உள்ளவர்; நீடிய பொறுமை உள்ளவர். மாறாத அன்பு அவரிடம் ஏராளம் உண்டு. அதில் அவர் உண்மை உள்ளவர். குமாரனிலும் ஆவியானவரிலும் வெளிப்படுகின்ற தன்மைகளும் வல்லமைகளும் பிதாவை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

 

ஆதி 1:1; 1தீமோ 1:17; யாத்தி 34:6,7; 1யோவான் 4:8; யோவான் 3:16; வெளிப்படுத்தல் 4:11; யோவான் 14:9; 1கொரிந்தியர் 15:28

பிதா

Anchor 4

4

நித்திய குமாரனாகிய தேவனே இயேசு கிறிஸ்து எனும் மனிதனாக வந்தார். அவர் மூலமாகதான் அனைத்தும் சிருஷ்டிக்கப்பட்டன. அவர் மூலம் தான் தேவ குணம் வெளிப்படுகிறது. அவராலேதான் மனித இனத்தின் இரட்சிப்பும் நிறைவேறி வருகிறது; உலகமும் நியாயந்தீர்க்கப்படுகிறது. மெய்யாகவே எப்போதும் தேவனாக இருக்கிற அவர், இயேசு கிறிஸ்து எனும் மெய்யான ஒரு மனிதனாக உருவெடுத்தார். அவர் பரிசுத்த ஆவியினால் கருவாக்கப்பட்டு, கன்னி மரியாளிடம் பிறந்தார். ஒரு மனிதனாக வாழ்ந்து, ஒரு மனிதனாக சோதிக்கப்பட்டார். ஆனாலும், தேவ அன்பையும் நீதியையும் பரிபூரணமாக வெளிப்படுத்தினார். அவர் தமது அற்புதங்கள் மூலம் தேவ வல்லமையையும் வெளிப்படுத்தினார். தாமே தேவன் வாக்குப்பண்ணிய மேசியா என்பதை அதன் மூலம் உறுதிப்படுத்தினார். நம் பாவங்களுக்காக, நம்முடைய இடத்திலிருந்து கஷ்டங்களை அனுபவித்து, சிலுவையில் மரித்தார். பிறகு உயிர்த்தெழுந்து, பரலோகப் பரிசுத்த ஸ்தலத்தில் நமக்காகப் பரிந்துபேச பரலோகம் சென்றுள்ளார். தமது மக்களை விடுவிக்கவும், அனைத்தையும் புதுப்பிக்கவும் இறுதியில் அவர் மகிமையோடு வரப்போகிறார்.

 

லூக்கா 1:35; 1கொரி 15:3,4; யோவான் 1:1-3,14; 2கொரி 5:17-19; யோவான் 5:22, பிலிப்பியர் 2:5-11; யோவான் 10:30; கொலோ 1:15-19; யோவான் 14:1-3; எபி 2:9-18; யோவான் 14:9; எபி 8:1,2; ரோமர் 6:23

குமாரன்

Anchor 5

5

சிருஷ்டிப்பு, மனிதனாதல், மீட்பு ஆகியவற்றில் பிதாவோடும் குமாரனோடும் நித்திய ஆவியாகிய தேவன் இணைந்து செயல்ப்பட்டார். அவருடைய ஏவுதலினால்தான் வேதாகமம் எழுதப்பட்டது. அவரே கிறிஸ்துவின் வாழ்க்கையைத் தம் வல்லமையால் நிறைத்தார். மனிதரைத் தம் பக்கம் இழுத்து, அவர்களுடைய குற்றங்களை உணர்த்துகின்றார். தமக்கச் செவிசாய்ப்பவர்களைப் புதுப்பித்து, தேவசாயலுக்கு மாற்றுகிறார். தம் பிள்ளைகளோடு எப்போதும் இருப்பதற்காக குமாரனும் பிதாவும் அவரை அனுப்பியிருக்கிறார்கள். அவர் ஆவிக்குரிய வரங்களைச் சபைக்குப் பகிர்ந்தளிக்கிறார்; கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழ, நமக்குப் பெலன் தருகிறார்; வேதாகமத்திற்கு இசைந்த வகையில் மழுச்சத்தியத்திற்குள் வழிநடத்துகிறார்.

 

ஆதி 1:1,2; அப் 1:8; லூக்கா 1:35; அப் 10:38; லூக்கா 4:18; 2கொரி 3:18; யோவான் 14:16-18,26; எபேசியர் 4:11,12; யோவான் 15:26,27; 2பேதுரு 1:21; யோவான் 16:7-13.

பரிசுத்த ஆவியானவர்

Anchor 6

6

அனைத்தையும் படைத்தவர் தேவன். தேவன் தமது சிருஷ்டிப்புச் செயலின் மெய்த்தன்மையை வேதாகமத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஆறுநாட்களுக்குள் வானத்தையும் பூமியையும் பூமியின் மேலுள்ள அனைத்து உயிர்களையும் தேவன் சிருஷ்டித்தார். பின்பு, அந்த வாரத்தின் ஏழாம் நாளில் அவர் ஓய்ந்திருந்தார். தாம் செய்து முடித்த சிருஷ்டிப்பு பணிக்கு நிலையான ஒரு நினைவு சின்னமாக ஓய்வுநாளை ஏற்ப்படுத்தினார். சிருஷ்டிப்பின் மகுடமாக விலங்கிய முதல் ஆணையும் பெண்ணையும் தேவன் தம் சாயலிலேயே படைத்தார். உலகத்தை ஆளும் அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தார். அதை பராமரிக்கும் பொறுப்பையும் அவர்களுக்குக் கொடுத்தார். அவர் படைத்த அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தது. அவை அவருடைய மகிமையை வெளிப்படுத்தின.

 

ஆதி 1; சங்கீதம் 19:1-6; ஆதி 2; சங்கீதம் 33:6,9; யாத்தி 20:8-11; சங்கீதம் 104; எபி 11:3

சிருஷ்டிப்பு

Anchor 7

7

ஆணும் பெண்ணும் தேவ சாயலில் படைக்கப்பட்டனர். அவர்களுக்கு தனித்துவம் இருந்தது; வல்லமை இருந்தது; தாங்களே சொந்தமாக சிந்தித்து செயல்படச் சுதந்திரமும் இருந்தது. அவர்கள் சுதந்திரம் உள்ளவர்களாக படைக்கப்பட்டபோதிலும், உயிருக்கும் மூச்சுக்கும் மற்ற எல்லாவற்றிற்க்கும் தேவனையே சார்ந்திருக்கின்ற தன்மையுள்ள உடலும் மனதும் ஆவியும் உடையவர்களாய் இருந்தார்கள். ஆனால் அவரை சார்ந்திருக்கவேண்டிய அவசியத்தை மறுதலித்து, நம் முதல் பெற்றொர் தங்கள் தேவனுக்குக் கீழ்படியத் தவறியதால், அவர் நியமித்திருந்த உன்னதமான நிலையிலிருந்து விழுந்துவிட்டார்கள். அவர்களில் இருந்த தேவ சாயல் களங்கப்பட்டது. அவர்கள் மரிக்கக்கூடியவர்களாய் மாறினார்கள். வீழ்ச்சியடைந்த இந்த இயல்பை உடையவர்களாக அவர்களுடைய சந்ததிகள் பிறந்து, அதன் விளைவுகளிலும் பங்குபெறுகின்றனர்; பெலவீனத்தோடும் தீமை செய்கிற இயல்போடும் பிறக்கின்றனர். ஆனால், கிறிஸ்துவுக்குள் தேவன் இவ்வுலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். மேலும், தங்கள் பாவங்களுக்காக வருந்தும் மனிதருக்கு, தம் ஆவியானவர் மூலமாகத் தேவசாயலை மீண்டும் கொடுக்கின்றார். தேவ மகிமைக்காகப் படைக்கப்பட்டவர்கள் தேவனை நேசிக்கவும், தங்கள் உடன் மனிதரை நேசிக்கவும், தங்கள் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கவும் அழைக்கப்படுகிறார்கள்.

 

ஆதி 1:26-28; அப் 17:24-28; ஆதி 2:7,15; ரோமர் 5:12-17; ஆதி 3; 2கொரி 5:19,20; சங்கீதம் 8:4-8; 1யோவான் 4:7,8,11,20; சங்கீதம் 51:5,10

மனித இயல்பு

Anchor8

8

தேவனுடைய குணம் பற்றியும், அவருடைய பிரமாணம் பற்றியும், அனைத்து உலகின் மேலும் அவருக்குள்ள ஆளுகையுரிமை பற்றியும் ஒரு போராட்டம் நடந்து வருகிறது. கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் இடையே நடக்கும் இந்த மாபெரும் போராட்டத்தில் மனித இணம் முழுவதும் சம்பந்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கும் உரிமையுடன் தேவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவி, தன்னை உயர்த்திக்கொள்வதற்காகச் சாத்தானாகவும் தேவ பகைஞனாகவும் மாறி, பரலோகத்தில் கலகம் செய்ய ஒரு கூட்டம் தூதர்களை வழிநடத்தியபோது, போராட்டம் அங்கு துவங்கினது. பூமியில் ஆதாம்-ஏவாளைப் பாவத்தில் விழச்செய்தபோது, இந்த உலகிலும் அந்த கலக ஆவியை அவன் நுழைத்தான். மனித இனத்தில் தேவசாயல் சீர்குலைவதற்கும், சிருஷ்டிக்கப்பட்ட இவ்வுலகமானது ஒழுங்கின்மை அடைவதற்கும், கடைசியில் நோவாகால வெள்ளத்தால் அவ்வுலகம் அழிவதற்கும் முதல் மனிதரின் இந்த பாவம் காரணமானது. அனைத்து சிருஷ்டிகளும் கவனித்துக்கொண்டிருக்க, மாபெரும் போராட்டம் நடக்கின்ற போர்க்களமாக இவ்வுலகம் மாறியது. ஆனால், அன்பான தேவனின் நீதி இறுதியில் இங்கு வெளிப்படபோகின்றது. இந்த போராட்டத்தில் தம்முடைய மக்களுக்கு உதவ, பரிசுத்த ஆவியையும் தமக்கு உண்மையாயிருக்கும் தூதர்களையும் கிறிஸ்து அனுப்புகிறார். அவர்கள் தேவ மக்களை வழிநடத்தி, பாதுகாத்து, இரட்சிப்பின் பாதையில் அவர்களைப் பலப்படுத்துகின்றார்கள்.

 

ஆதி 3; ரோமர் 8:19-22; ஆதி 6-8; 1கொரி 4:9; ஏசாயா 14:12-14; எபி 1:14; எசேக் 28:12-18; 2பேதுரு 3:6; ரோமர் 1:19-32; வெளி 12:4-9; ரோமர் 5:12-21

மாபெரும் போராட்டம்

Anchor 9

9

இவ்வுலகின் துன்பத்திலும் தேவ சித்தத்திற்குப் பரிபூரணமாகக் கீழ்ப்படிந்து கிறிஸ்து வாழ்ந்த வாழ்க்கை, அவர் மரணம், அவர் உயிர்த்தெழுதல் மூலமாக, பாவத்திற்கான நிவாரணத்தைத் தேவன் ஏற்படுத்தினார். இந்த பாவ நிவாரணத்தை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்கின்ற யாவரும் நித்திய வாழ்வைப் பெறமுடியும். மேலும், சிருஷ்டிகரின் அளவில்லாததும் பரிசுத்தமானதுமான அன்பை அனைத்துச் சிருஷ்டிகளும் இந்தப் பாவ நிவாரணத்தின் மூலம் தெளிவாக அறிந்துகொள்கிறார்கள். பரிபூரணமான இந்தப் பாவநிவாரண பலியின் மூலம் இந்த பாவ உலகில் தேவனுடைய பிரமாணத்தின் நீதியும் அவருடைய குணமான கிருபையும் வெளிப்படுகின்றன. இந்த பலி நம் பாவத்தைக் கண்டிக்கிறது; நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பும் வழங்குகிறது. நமக்குப் பதிலாகவும், நமது பாவத்தைப் பரிகரிக்கவுமே கிறிஸ்து மரித்தார். நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்கி, நம் குணத்தை நல்லதாக்குவதே அதன் நோக்கம். தீய சக்திகளுக்கு எதிரான தேவனுடைய வெற்றியை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அறிவிக்கிறது. மேலும், கிறிஸ்துவின் பாவ நிவாரணத்தை ஏற்றுக்கொள்கின்ற யாவரும் பாவத்தின்மேலும் மரணத்தின்மேலும் அடையப்போகிற இறுதி வெற்றியை அது உறுதிப்படுத்துகிறது. இயேசுகிறிஸ்துவின் கர்த்தத்துவத்தை அது அறிவிக்கின்றது. பரலோகிலும் பூலோகிலும் உள்ளவர்களின் முழங்கால்கள் யாவும் இவருக்கு முன்பாக முடங்கும்.

 

ஏசாயா 53; 2கொரி 5:14,15,19-21; யோவான் 3:16; பிலிப்பியர் 2:6-11; ரோமர் 1:4; கொலோ 2:15; ரோமர் 3:25; 1போதுரு 2:21,22; ரோமர் 4:25; 1யோவான் 2:2; ரோமர் 8:3,4; 1யோவான் 4:10; 1கொரி 15:3,4,20-22

கிறிஸ்துவின் வாழ்வும், மரணமும் உயிர்த்தெழுதலும்

Anchor 10

10

தேவன் நம்மேல் அளவற்ற அன்பும் இரக்கமும் வைத்திருக்கிறார். எனவே பாவமரியாத கிறிஸ்துவை நமக்காகப் பாவமாக்கினார். இவ்வாறு கிறிஸ்துவுக்குள் நாம் தேவனுடைய நீதி ஆகிறோம். நமக்கு உதவி தேவை என்பதைப் பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலின் மூலம் தான் நாம் உணரமுடியும். நமது பாவநிலையை அப்போது நாம் ஒத்துகொள்வோம்; அதன்பின் நாம் மீறுதல்களிலிருந்து மனந்திரும்ப முடியும்; இயேசுவே நம் ஆண்டவராகிய கிறிஸ்து என்பதையும், 'அவரே நமக்காக மரித்து, உதாரணமாய் வாழ்ந்தார்' என்பதையும் விசுவாசிப்போம். இத்தகைய விசுவாசமானது, தேவ வார்த்தையின் தெய்வீக வல்லமையால் நமக்கு கிடைக்கின்றது. கிறிஸ்துவின் மூலம் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம். அதாவது, அவர் மூலமே நாம் மகன்களாகவும் மகள்களாகவும் தத்தெடுக்கப்பட்டு, பாவத்தின் ஆளுகையிலிருந்து விடுதலை பெறுகின்றோம். ஆவியானவர் மூலம் நாம் மறுபடியும் பிறந்து, பரிசுத்தமாக்கப்படுகின்றோம். அவர் நமது இதயங்களைப் புதுப்பித்து, தேவனுடைய அன்பின் பிரமாணத்தைத் நம்முடைய இதயங்களில் எழுதுகிறார். பரிசுத்த வாழ்வு வாழ்வதற்கான வல்லமையை அதன் மூலம் பெறுகின்றோம். அவருக்குள் வாழும்பொழுது, தெய்வீக சுபாவத்தில் பங்கடைந்து, இப்பொழுதும் நியாயத்தீர்ப்பிலும் நமக்கு இரட்சிப்பு உறுதி எனும் நிச்சயத்தைப் பெற்றுகொள்கின்றோம்.

 

எசேக் 36:25-27; கலா 1:4; மாற்கு 9:23,24; லூக்கா 17:5; கலா 4:4-7; யோவான் 3:3-8,16; எபே 2:5-10; யோவான் 16:8; கோலோ 1:13,14; ரோமர் 3:21-26; தீத்து 3:3-7; ரோமர் 5:6-10; எபி 8:7-12; ரோமர் 8:1-4, 14-17; 1பேதுரு 1:23, ரோமர் 10:17; 1பேதுரு 2:21,22; ரோமர் 12:2; 2பேதுரு 1:3,4; 2கொரி 5:17-21

இரட்சிப்பின் அனுபவம்

Anchor 11

11

இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தினால், தீய சக்திகளை வென்றார். இப்பூலோக ஊழிய காலத்தில் அசுத்த ஆவிகளை அடக்கிய இயேசு, தம் சிலுவையில் அவைகளின் வல்லமையை முறியடித்து, அவைகளின் இறுதி அழிவையும் உறுதிப்படுத்தியுள்ளார். சந்தோஷத்தோடும்  சமானத்த்தோடும் தேவா அன்பின் நிச்சயடித்தோடும் நாம் அவரோடு நடக்கலாம். நம்மை கட்டுப்படுத்த முயலுகின்ற தீய சக்திகளை இயேசு கிறிஸ்து ஏற்கனவே வென்றிருப்பதால், நாமும் அவற்றை வெல்ல முடியும். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் செய்து, நமக்கு வல்லமை அளிக்கிறார். "ஏசுவே நம் ரட்சகரும் ஆண்டவருமாய் இருக்கிறார்" என்கின்ற அர்ப்பணிப்போடு தொடர்ந்து நாம் வாழும் பொது கடந்த கால செய்கைகளின் சுமையில் இருந்து விடுவிக்கப்படுகிறோம். நாம் இனியும் தீய வல்லமைகளுக்கு பயந்து, கடந்த கால அர்த்தமற்ற வாழ்க்கையை அந்தகாரத்திலும், அறியாமையிலும் வாழ வேண்டியதில்லை. யேசுவில் நாம் விடுதலை பெற்றிருக்கிறோம். எனவே கிறிஸ்துவின் குண சாயலில் நாம் வளர வேண்டும். அனுதின ஜெபத்தில் நாம் அவரோடு பேச வேண்டும்; தினமும் அவருடைய வார்த்தையை உட்க்கொண்டு, அவ்வார்த்தைகளையும் அவரின் வழிநடத்தலையும் தியானிக்க வேண்டும்; அவரை பாடல்களால் துதித்து ஆராதிக்க ஒன்று கூட வேண்டும்; சபையின் பணியில் பங்கு பெறவேண்டும்.நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு அன்பின் சேவை செய்து, கிறிஸ்துவின் இரட்சிப்பை சாட்சிபகருந்தபோது கிறிஸ்துவின் பிரசன்னம் ஆவியானவர் மூலம் நித்தமும் நம்மோடிருந்து, ஒவொரு வினாடியும் நம்மை நல்லவர்களாக மாற்றி, நம் ஒவ்வொரு முயற்சியையும் ஆவிக்குரிய அனுபவமாக மாற்றும்.

சங் 1:1,2;  எபே 6:12-18; சங் 23:4; பிலி 3:7-14; சங் 77:11,12; கொலோ 1:13,14; மத்தேயு 20:25-28; கொலோ 2:6,14,15;லூக்கா 10:17-20; 1 தெச 5:16-18; யோவான் 20:21; 1 தெச 5:23; ரோமர் 8:38,39; எபி 10:25; 2 கொரி 3:17,18; 2 பேதுரு 2:9; கலா 5:22-25; 2 பேதுரு 3:18; எபே 5:19-20; 1 யோவான் 4:4

கிறிஸ்துவில் வளர்ச்சி

Anchor12

12

இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும் ஆண்டவராகவும் அறிக்கை பண்ணுகிற விசுவாசிகள் அடங்கிய ஒரு சமுதாயம் தான் திருச்சபை. பழைய ஏற்பாட்டு காலங்களில் இருந்த தேவா பிள்ளைகளின் தொடர்ச்சியே கிறிஸ்தவ திருச்சபை. ஒன்றுபட்டு தேவனை ஆராதிக்கவும், நமக்குள் தோழமை பெருகவும், தேவனுடைய வார்த்தையால் போதிக்கப்படவும், திருவிருந்தில் பங்கு பெறவும் மனித இனம் முழுவதிற்கும் சேவை செய்யவும், இவுலகம் முழுவதும் நற்செய்தியை அறிவிக்கவும் இவ்வுலகத்தில் இருந்து நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். மனிதனாக அவதரித்த வார்தைகளாகிய கிறிஸ்துவிடம் இருந்தும், எழுதப்பட்டுள்ள வார்தைகளாகிய வேதாகமத்தில் இருந்தும் சபை தன்னுடைய அதிகாரத்தை பெறுகிறது. தேவனுடைய குடும்பம் தான் திருச்சபை. திருச்சபை அங்கத்தினர்கள் அவருடைய பிள்ளைகளாக தத்தெடுக்கப்பட்டுள்ளனர். புது உடன்படிக்கையின் அடிப்படையில் அவர்கள் வாழ்கின்றனர். கிறிஸ்துவின் சரீரமாக திருச்சபை விளங்குகிறது. இவ்விசுவாச சமுதாயத்திற்கு கிறிஸ்துவே தலையாய் இருக்கிறார். தம் மணவாட்டியாகிய சபையை சுதந்தரித்து, பரிசுத்தப்படுத்தும் பொருட்டே கிறிஸ்து மரித்தார். சகல காலங்களிலும் தம்மேல் நம்பிக்கை வைத்து, தம் இரத்தத்தால் விலைக்கிரயத்திற்கு வாங்கப்பட்டு, கரை திரை இல்லாமல், பரிசுத்தமாகவும் களங்கமற்றதாகவும் விளங்கும் மகிமையான சபையை அவர் தமக்கு உரிமையாக்கிக்கொள்ளப்போகிறார். அவர் வெற்றியோடு திரும்பி வரும்போது அப்படி செய்வார்.

மத்தேயு16:13-20; எபே 2:19-22; மத்தேயு 18:18; எபே 3:8-11; மத்தேயு 28:19,20; எபே 4:11-15; அப் 7:38; எபே 5:23-27; கொலோ 1:17,18.

திருச்சபை

Anchor 13

13

கடைசி நாட்களில் எங்கும் தேவ துரோகம் நடக்கும் போது இயேசுவை விசுவாசிக்கவும், தேவனுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவும் ஒரு மீதமான சபை அழைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் நேரம் வந்து விட்டதையும், கிறிஸ்துவினால் இப்போது கிடைக்கும் இரட்சிப்பை பற்றியும், அவர் இரண்டாம் வருகை நெருங்கி விட்டதையும் இச்சபை அறிவிக்கின்றது. வெளி 14ல் சொல்லப்பட்டுள்ள மூன்று தூதுகளில் இந்த செய்தி அடங்கியுள்ளது. பரலோகத்தில் விசாரணை நடைபெறும் நேரத்தில் இந்த முத்தூது அறிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த அறிவித்தலின் மூலமாகப் பூமியில் சீர்த்திருத்தமும் மனமாற்றமும் ஏற்படுகின்றது. உலகளாவிய இந்த ஊழியத்தில், தனித்தனியாகப் பங்கு பெறுமாறு அனைத்து விசுவாசிகளும் அழைக்கப்படுகின்றனர்.

 

2 கொரிந்தியர் 5:10, வெளிப்படுத்தல் 12:17,1பேதுரு 1:16-19, வெளிப்படுத்தல்14:6-12,2பேதுரு 3:10-14, வெளிப்படுத்தல் 18:14, யூதா 3:14, வெளிப்படுத்தல் 21:1-14.

மீதமான திருச்சபையும் அதன் பணியும்

Anchor 14

14

பல்வேறு அங்கத்தினர்கள் அடங்கிய ஒரே சரீரம் தான் சபை. அதில் பல்வேறு தேசத்தாரும், பல்வேறு இனத்தாரும், பல்வேறு மொழியினரும், பல்வேறு மக்களும் அங்கத்தினர்களாக இருக்கின்றனர். கிறிஸ்துவுக்குள் நாம் புது சிருஷ்டிகள். இனமோ, கலாச்சாரமோ, கல்வியோ, தேசமோ, உயர்ந்தவர்-தாழ்ந்தவர், ஏழை_ பணக்காரர், ஆண்- பெண் என்கிற வித்தியாசமோ நம்மை பிரிக்க முடியாது. கிறிஸ்துவுக்குள் நாம் அனைவரும் சமம். ஒரே ஆவியானவர் மூலமாக நம்மை தம்மோடும், உடன் மனிதரோடும் இணைத்துக்கட்டியுள்ளார். பட்சப்பாதமில்லாமல், ஒளிவு மறைவு இல்லாமல் நாம் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவைப்பற்றி வெளிப்படுத்தியிருக்கிற உண்மைகளால் நாம் ஒரே நம்பிக்கையும் விசுவாசத்தையும் உடையவர்களாக மாறியிருக்கின்றோம். அவனைப் பற்றி சாட்சியாக எல்லோரிடமும் சொல்கின்றோம். திருத்துவ தேவனின் ஒற்றுமைத்தாம் நம் ஒற்றுமைக்கும் ஆதாரம். ஏனென்றால், அவரே நம்மை தம்முடைய பிள்ளைகளாக தத்தெடுத்துள்ளார்.

 

சங்கீதம் 133:1; 1 கொரிந்தியர் 12:12-14; மத்தேயு 28:19,20; 2கொரிந்தியர்5:16,17; யோவான் 17:20-23;அப் 17:26,27;எபேசி4:1-6,14-16; ரோமர் 12:4,5; கொலோ 3:10-15.

கிறிஸ்துவில் ஒற்றுமை

Anchor 15

15

இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மேலும் உயிர்த்தெழுதலின் மேலும் உள்ள விசுவாசத்தை திருமுழுக்கின் மூலம் அறிக்கை செய்கின்றோம். மேலும் நாம் நம் பாவத்திற்கு மரித்து புதுவாழ்வு வாழப்போகின்றோம் எனும் நோக்கத்தையும் திருமுழுக்கின் மூலம் அறிவிக்கின்றோம். கிறிஸ்துவே நம் ஆண்டவராகிய இரட்சகர் என்பதை ஏற்றுக்கொண்டு, அவருடைய பிள்ளைகளாக மாறின நாம் இதன் மூலம் அவருடைய சபையின் அங்கத்தினர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றோம் . கிறிஸ்துவோடு நாம் இணைந்ததற்கும், நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டதற்கும், பரிசுத்த ஆவியை நாம் பெற்றுக்கொண்டதற்கும் ஞானஸ்நானம் ஒரு அடையாளமாக இருக்கிறது. இயேசுவின் மேலுள்ள நம் விசுவாசத்தை அறிவித்து, பாவத்திலிருந்து மனந்திரும்பியதற்கான சாட்சியத்தை வெளிப்படுத்தியப்பிறகு, தண்ணீரில் மூழ்கி நாம் ஞானஸ்நானம் பெறுகின்றோம். மேலும், பரிசுத்த வேதாகமத்தின் சத்தியங்கள் நமக்கு ஏற்கனவே சொல்லப்பட்டு, அதன் போதனைகளை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம்.

 

மத்தேயு 28:19,20;அப்22:16;2:38; ரோமர் 6:1-16; அப் 16:30-33;கொலோ 2:12,13.

ஞானஸ்நானம்

Anchor 16

16

நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தும் பொருட்டு, அவருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் சுட்டிக்காட்டுகிற திருவிருந்தில் நாம் பங்குப் பெறுகின்றோம். இந்த திருவிருந்து அனுபவத்தில் கிறிஸ்து தம் பிள்ளைகளை சந்திக்கிறார். அதில் அவர்களை பலப்படுத்துகிறார். நாம் அதில் பங்கு பெறுவதின் மூலம் அவர் மறுபடியும் திரும்பி வரும் வரைக்கும் கிறிஸ்துவின் தியாக மரணத்தை சந்தோஷமாக அறிவிக்கிறோம். திருவிருந்துக்காக ஆயத்தப்படுதலில் சுய ஆய்வும், மனந்திரும்புதலும், பாவ அறிக்கையும் அடங்கியுள்ளன. மறுபடியும் புதுப்பிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுவதை முக்கியப்படுத்தவும் கிறிஸ்துவை போன்று தாழ்மையுடன் பிறரை சேவிக்க நம் விருப்பத்தை தெரியப்படுத்தவும் அன்பால் நம் இதயங்களை இணைக்கவும் தான் கால்கழுவும் ஆராதனையை நம் ஆண்டவர் நியமித்திருக்கிறார். விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் யாராயிருந்தாலும் திருவிருந்து ஆராதனையில் பங்கு பெறலாம்.  

 

மத்தேயு 26:17-30;1கொரி:10:16,17; யோவான் 6:48-63;1 கொரி 11:23-30; யோவான் 13:1-17; வெளிப்படுத்தல் 3:20.

திருவிருந்து

Anchor 17

17

மனித இனம்,  திருச்சபை ஆகியவற்றின் நன்மைக்காக அன்பின் ஊழியத்தில் ஒவ்வொரு அங்கத்தினரும் பணிபுரிவதற்கு என்று எல்லா காலங்களிலும் தேவன் தம்முடைய சபையின் அனைத்து அங்கத்தினர்களுக்கும் ஆவிக்குரிய வரங்களை வழங்கி வருகின்றார். தேவன் தந்த பணிகள் யாவற்றையும் சபை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக தேவையான திறமைகளையும் ஊழியங்களையும் தேவனுடைய சித்தப்படியே பரிசுத்த ஆவியானவர் பங்கீடு செய்து ஒவ்வொரு அங்கத்தினருக்கும் வரமாக அளிக்கின்றார்.  இத்தகைய வரங்களில் விசுவாசம்,  குணமாக்கும் வரம், தீர்க்கதரிசனம் உரைத்தல்,  ஆவிகளை பகுத்தறிதல், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல்,  போதித்தல் , அறிவை உணர்த்துதல்,  ஒப்புரவாக்குதல்,  தேற்றுதல்,  சுயத்தை வெறுத்து ஊழியம் செய்தல்,  தர்மம் செய்தல்,  மக்களை உற்சாகப்படுத்துதல் முதலான ஊழியங்களும் அடங்கியுள்ளன.  சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், தேவன் ஏற்படுத்தியிருக்கிறார்.  திருச்சபையின் விசுவாசிகளை இவர்கள் தேவ பணிக்கு தகுதி படுத்தவேண்டும்.  ஆன்மீக முதிர்ச்சிக்கு வழிநடத்த வேண்டும்.  தேவனை அறியும் அறிவிலும் விசுவாசத்திலும் ஒன்றுபடுத்த வேண்டும்.  தேவனுடைய கிருபையின் நிமித்தம் இத்தகைய ஆவியின் வரங்களை சபை அங்கத்தினர்கள் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக பயன்படுத்தும்போது , தவறான கொள்கையின் அழிவு தன்மையிலிருந்தும் திருச்சபை காக்கப்படுகின்றது.  அன்பிலும் விசுவாசத்திலும் கட்டப்படுகிற சபையானது தேவனிடமிருந்து வளர்ச்சியின்மேல் வளர்ச்சி பெறுகின்றது.

 

அப்6:1-7;எபேசியர் 4:8,11-16; ரோமர் 12:4-8;1தீமோத்3:1-13;1கொரிந்12:9-11,27,28; 1 பேதுரு 4:10,11.

ஆவிக்குரிய வரங்களும் ஊழியர்களும்

Anchor 18

18

பரிசுத்த ஆவியின் வரங்களில் ஒன்று தீர்க்கதரிசன வரம்.  இந்த வரம் தான் மீதமான சபையை அடையாளமிட்டு காட்டுகின்றது.  எலன் ஒயிட்டின் ஊழியத்தில் இந்த வரம் தான் வெளிப்பட்டுள்ளது.  ஆண்டவரின் ஊழியக்காரியான  அவருடைய எழுத்துக்கள் அவருடைய அதிகார பூர்வமான ஆதாரங்களாய்த்  தொடர்கின்றன.  சபைக்கு தேவையான ஆறுதலையும் வழிநடத்துதலையும், அறிவுரையையும்,  சீர்திருத்தத்தையும் அவை வழங்குகின்றன . அனைத்து போதனைகளையும்,  அனுபவங்களையும் பரிசோதிப்பதற்கு அளவுகோலாக வேதாகமம் மட்டுமே உள்ளது என்பதையும் அவை தெளிவுபடுத்தி காட்டுகின்றன.

 

யோவேல்2:28,29;வெளி 12:17; அப் 2:14-21; வெளி 19:10;எபிரெயர் 1:1-3.

தீர்க்கதரிசன வரம்

Anchor 19

19

தேவ பிரமாணத்தின் மேன்மையான நியதிகளை பத்து கற்பனைகளில் காணலாம்.  அவை கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் வெளிப்பட்டுள்ளன.  மனித நடத்தை மற்றும் உறவுகளை கருத்தில்கொண்டு தேவனுடைய அன்பையும் , சித்தத்தையும், நோக்கத்தையும் அவை வெளிப்படுத்துகின்றன.  எல்லா காலங்களிலும் உள்ள மக்களையும் அவை கட்டுப்படுத்துகின்றன.  தேவன் தமது மக்களிடம் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடிப்படையாகவும்,  தேவனுடைய விசாரணைக்கு அளவுகோலாகவும்  கட்டளைகள் திகழ்கின்றன.  பரிசுத்த ஆவியானவர் மூலமாக பாவத்தை உணர்த்தி நமக்கு இரட்சகர் தேவை என்னும் உணர்வை உண்டாக்குகின்றன.  முற்றிலும் தேவ கிருபையால் கிடைப்பதுதான் இரட்சிப்பு. அது கிரியையினால் கிடைப்பது அன்று.  ஆனால் இரட்சிப்பை பெற்றதின் விளைவாக நாம் கற்பனைகளுக்கு கீழ்ப்படிவோம்.  இந்த கீழ்படிதல் தான் கிறிஸ்தவ குணத்தை நம்முள் உருவாக்குகின்றது . அதன் விளைவாக நல்வாழ்வை நாம் உணர முடிகிறது.  நமது ஆண்டவர் மேலுள்ள நம் அன்பையும்,  பிறர் மேலுள்ள நம் அக்கரையையும் இந்த கீழ்படிதல் தான் வெளிப்படுத்துகின்றது.  நம் வாழ்வை மாற்றக்கூடிய தேவ வல்லமையை விசுவாசத்தின் கீழ்படிதல் வெளிக்காட்டுகின்றது. இவ்வாறு நமது கிறிஸ்தவ சாட்சியை அது பலப்படுத்துகின்றது.

 

யாத் 20:1-17; யோவான் 15:7-10; உபாகமம் 28;1-14; ரோமர் 8:3,4; சங்கீதம் 19:7-14; எபேசியர் 2:8-10; எபிரேயர்:8: 8-10; மத்தேயு 5:17-20; 1 யோவான் 5:3; மத்தேயு 22:36-40.

தேவனுடைய கட்டளை

Anchor 20

20

ஓய்வுநாள்

நம் தயாளமுள்ள சிருஷ்டிகர் இவ்வுலக படைப்பின் ஆறு நாட்களுக்கு பின்னர் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்தார்.  படைப்பின் நினைவுச் சின்னமான ஏழாம் நாளை அனைத்து மக்களுக்கும் ஓய்வு நாளாக நிறுவினார் ."ஏழாம் நாளே ஓய்வு நாள்" என்று தேவனுடைய மாறாத நியாயப்பிரமாணத்தின் நான்காம் கற்பனை வலியுறுத்தி கட்டளையிடுகின்றது . ஏழாம் நாளே தொழுகை செய்ய வேண்டிய நாள். இளைப்பாற வேண்டிய நாள். ஊழியம் செய்யவேண்டிய நாள். இயேசுவின் நடத்தையும், ஊழிய போதனையும் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.  தேவனோடும், பிற மனிதரோடும் ஐக்கியம் வைத்துக்கொள்கிற மகிழ்ச்சிமிக்க நாளாக ஓய்வுநாள் இருக்கின்றது. கிறிஸ்துவில் நாம் மீட்கப்பட்ட தற்கும், நாம் அவரால் பரிசுத்தமாவதற்கும் நம் விசுவாசத்திற்குமான ஓர் அடையாளமாக அது இருக்கின்றது. தேவனுடைய ராஜ்யத்தில் நம்முடைய நித்திய எதிர்காலத்தை முன்னமே ருசிப் பார்ப்பதாயிருக்கிறது.  தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையேயான நித்திய உடன்படிக்கையின் நிரந்தரமான ஓர் அடையாளமாக ஓய்வு நாள் இருக்கின்றது.  ஒரு மாலை முதல் மறு மாலை வரையிலும் அதாவது ஒரு சூரிய மறைவிலிருந்து அடுத்த சூரிய மறைவு வரையிலும் உள்ள பரிசுத்த நேரத்தினுடைய மகிழ்ச்சியான அனுசரிப்பாகவும், தேவனுடைய படைப்பையும் மீட்பையும் கொண்டாடுதலாகவும் இருக்கின்றது .

 

ஆதி2:1-3; ஏசாயா 58:13,14; யாத் 20:8-11; எசேக்கியேல் 20:12,20; யாத் 31:13-17; மத்தேயு 12:1-12; லேவி 23: 32; மாற்கு 1:32; உபாகமம் 5:12-15; லூக்கா 4:16; ஏசாயா 56:5,6; எபி 4:1-14.

Anchor 21

21

உக்கிரணத்துவம்

தேவன் நம்மிடம் நம்பி ஒப்படைத்திருக்கிற நேரம், வாய்ப்புகள், திறமைகள், உடைமைகள், பூமியின் ஆசீர்வாதங்கள், வளங்கள் ஆகியவற்றை தேவனுக்காக நிரூபிக்க வேண்டிய உக்கிராணக்காரர்களாக நாம் இருக்கின்றோம். அவற்றை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அதைக்குறித்து தேவனுக்கு நாம் கணக்கு கொடுக்க வேண்டும். தேவனுடைய சபை நிலைத்து நிற்பதற்கும், வளர்வதற்கும் ,தேவனுடைய நற்செய்தியை பறைசாற்றுவதற்கும் காணிக்கைகள் ,தசம பாகங்கள் கொடுக்கப்பட வேண்டும்.  இவ்வாறு தேவனுக்கும் நம் சக மனிதர்களுக்கும் விசுவாசத்தினாலே நாம் செய்கிற ஊழியத்தின் மூலம் நாம் தேவனுடைய உடமை என்பதை ஒத்துக் கொள்கிறோம். பொருளாசை, சுயநலம், பேராசை இவற்றின் மேல் நாம் வெற்றி கொள்ளவும், அன்பில் நாம் வளரவும் தேவன் நமக்கு கொடுத்திருக்கிற கருவிதான் உக்கிராணத்துவம். தன்னுடைய விசுவாசத்தின் பலனாக மற்றவர்களுக்கு வருகிற ஆசீர்வாதங்களை பார்த்து உக்கிராணக்காரன் மகிழ்ச்சி அடைகிறான்.

 

ஆதி 1:26-28; மத்தேயு 23:23;ஆதி 2:15; ரோமர் 15:26,27; 1 நாளாகமம் 29:14; 1கொரிந்9:9-14; ஆகாய் 1:3-11; 2கொரிந்தி8:1-15; மல்கி 3:8-12.

Anchor 22

22

நினைவிலும் உணர்விலும் செயலிலும் பரலோக நியதிகளின் படி நடக்கிற தேவனுடைய பிள்ளைகளாயிருப்பதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.. நம்முடைய கர்த்தரின் பண்புகள் ஆவியினால் நம்மில் மீண்டும் உருவாக வேண்டும். அதற்காக நம் வாழ்வில் கிறிஸ்தவ சந்தோஷம், ஆரோக்கியம், தூய்மை போன்றவற்றை உருவாக்கும் காரியங்களில் மட்டுமே நாம் நம்மை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இதன் பொருள் என்னவெனில் நம் விளையாட்டு, பொழுதுபோக்கு யாவும் கிறிஸ்தவ தன்மைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். கலாச்சார வேறுபாடுகள் உள்ளபோதிலும் நம்முடைய ஆடைகள் எளிமையும், ஒழுக்கமும், சுத்தமும் உடையதாக இருக்க வேண்டும். உண்மையான அழகு வெளிப்புறமான அலங்காரத்தில் இல்லை என்று நாம் சொல்வதால், நம் ஆடை அதற்கு பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும். அழிவில்லாத ஆபரணமாகிய மேன்மையும் அமைதியான ஆவியில் தான் மெய்யான அழகுஉள்ளது. ஏனெனில் நமது சரீரங்கள் பரிசுத்த ஆவியினுடைய ஆலயங்களாக இருக்கின்றன. நாம் புத்திசாலித்தனமாக அதை காக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.  போதுமான அளவு உடற்பயிற்சியுடன் ஓய்வும் நல்ல ஆரோக்கிய உணவு வகைகளும் இருக்க வேண்டும். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள தவிர்க்க வேண்டிய உணவு வகைகளையும் மது போன்றவற்றையும் விளக்க வேண்டும் .மதுபானங்களும், புகையிலையும், போதைப் பொருட்களும் நமது சரீரங்களுக்கு  கெடுதலை விளைவிக்கும்.  நாம் அவற்றை விட்டுவிட வேண்டும் .அதற்கு பதிலாக நம்முடைய ஆரோக்கியம், சந்தோஷம், நற்குணம் ஆகியவற்றின் மேல் ஆசையாய் இருக்கிற கிறிஸ்துவினுடைய ஒழுங்கு முறைக்குள் நம் சரீரங்களையும் நினைவுகளையும் காத்துக் கொள்ள வேண்டும்.

 

லேவி 11:1-47; எபே 5:1-21; ரோமர் 12:1,2; பிலிப்பியர் 4:8; 1கொரிந் 6:19,20; 1 பேதுரு 3:1-4; 1 கொரிந் 10:31; 1 யோவான் 2:6; 2 கொரிந் 6:14, 7:1; 3யோவான் ;2கொரிந் 10:5.

கிறிஸ்தவ நடத்தை

23

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற திருமண வாழ்வு வாழ்நாள் முழுவதும் நிலவ வேண்டிய தோழமை ஆகும்.  இயேசுவும் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.  இந்த திருமணம் ஏதேனில் ஏற்படுத்தப்பட்டது.  மேலும் கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் இடையேயான நிரந்தரமான உறவையும், நெருக்கத்தையும், பரிசுத்தத்தையும் ,அன்பையும் பிரதிபலிப்பதாக திருமணம் அமைந்துள்ளது. ஒரு கிறிஸ்தவ திருமணத்தில் கணவனும் மனைவியும் தங்களை ஒருவருக்கொருவரும் தேவனுக்கு ஒப்படைக்கிறார்கள். எனவே பொதுவான விசுவாசம் உள்ளவர்கள் தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர அன்பு, மதிப்பு, மரியாதை, பொறுப்பு ஆகியவை இந்த உறவுமுறையை கட்டுவதாயிருக்கின்றன.  விவாகரத்தை குறித்து இயேசு "விபச்சாரத்தின் நிமித்தமாக மட்டுமே கணவனோ மனைவியோ விவாகரத்து செய்யலாம்" என்று சொல்லி இருக்கிறார் ."அவ்வாறின்றி கணவனோ மனைவியோ வேறு ஒருவரை மணந்தால் அது விபச்சாரமாகும்" என்றும் சொல்லியிருக்கிறார்.  சில குடும்ப உறவுகளில் கருத்தளவில் விரிசல் ஏற்பட்டாலும் கணவனும் மனைவியும் தங்களைத்தாங்களே ஒருவருக்கொருவர் முற்றிலுமாக ஒப்படைத்து, கிறிஸ்தவ அன்பின் ஐக்கியத்தில் வெற்றிபெறலாம். அவர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாயிருந்து, ஆன்மீக முதிர்ச்சி அடைய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.  அத்தகைய குடும்பங்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். கர்த்தருக்குக் கீழ்ப்படிதற்கும் அவர்மேல் அன்பு செலுத்துவதற்கும் தங்கள் பிள்ளைகளை பெற்றோர் பழக்குவிக்க வேண்டும்.  பெற்றோர் தங்கள் வார்த்தையிலும் செயலிலும் பிள்ளைகளுக்கு முன்மாதிரி காட்ட வேண்டும். மிகுந்த அன்பும் ஒழுக்க நெறியும் உடையவர் கிறிஸ்து.  மாறாத அன்பும் பாதுகாக்கும் தன்மையும் உடையவர். அவருடைய சரீரமாகிய தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினர்களாக தம் பிள்ளைகள் மாறவேண்டும் என்று அவர் விரும்புகின்றார்.  "குடும்பத்தில் அன்பின நெருக்கம் அதிகரித்தல்" என்பது கடைசி நற்செய்தியின் ஓர் அடையாளமாக இருக்கின்றது.

 

ஆதி 2:18-25; மாற்கு 10:11,12; யாத் 20:12; லூக்கா 16:18; உபாக 6:5-9; யோவான் 2:1-11; நீதி 22:6; 1கொரிந் 7:10,11; மத்தேயு 5:31; எபே 5: 21-33; மத்தேயு 19: 3-9; எபே 6: 1-4.

திருமணமும் குடும்பமும்

Anchor 23
Anchor 24

24

பரலோகத்தில் மனிதரால் அல்லாமல், கர்த்தரால் அமைக்கப்பட்ட உண்மையான ஆசரிப்பு கூடாரமாகிய ஒரு பரிசுத்த ஸ்தலம் இருக்கிறது.  சிலுவையில் பாவ நிவாரண பலியாக மரித்த இயேசு அதன் பலனை விசுவாசிகளுக்கு கொடுப்பதற்காக அந்தப் பரிசுத்த ஸ்தலத்தில் நமக்காக பரிந்து பேசி வருகிறார். அவர் பரமேறியவுடன் பிரதான ஆசாரியராக பொறுப்பேற்று, தமது பரிந்து பேசுதலைத் துவக்கினார்.  2300 தீர்க்கதரிசன நாட்களின் இறுதி வேளையாகிய 1844இல், இயேசு கிறிஸ்து தமது பாவ நிவாரண ஊழியத்தின் இரண்டாவது பகுதியை செய்ய ஆரம்பித்தார். பாவமனைத்தையும் அழிப்பதே நியாய விசாரணை வேலையின் நோக்கம்.  இதற்கு முன்னடையாளமாகவே முற்காலத்தில் பாவநிவாரண நாளன்று எபிரேய பரிசுத்த ஸ்தலத்தில் பாவ நிவாரண நாள் சுத்திகரிப்பு நிகழ்ந்தது.  பூலோக பரிசுத்த ஸ்தலத்தில் மிருகங்களின் இரத்தத்தால் சுத்திகரிப்பு நிழலாக நடந்தது.  ஆனால் பரலோகில் பழுதற்ற இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிப்பு நடைபெறுகின்றது. பூமியிலிருந்து பரலோகம் செல்ல தகுதியானவர்கள் யார் என்பதை பரலோக அறிவுஜீவிகளுக்கு இந்த விசாரணை வெளிப்படுத்துகிறது.  கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலின் போது உயிர்த்தெழ தகுதியானவர்கள் என்று இந்த விசாரணை வெளிப்படுத்துகின்றது.  அதுவுமன்றி உயிரோடிருப்பவர்களில் யாரெல்லாம் இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து, தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் மறுரூபமடைந்து பரலோகம் வர தகுதியானவர்கள் என்றும் வெளியாகின்றது. இயேசுவில் விசுவாசம் வைப்பவர்களை இரட்சிப்பதில் உள்ள தேவ நீதியை இந்த விசாரணை மெய்ப்பித்து காட்டுகின்றது. தேவனுடைய விசுவாசத்தில் நிலைத்து இருப்பவர்கள் எல்லோரும் தேவனுடைய ராஜ்யத்தை பெற்றுக் கொள்வார்கள் என்பதை அது வலியுறுத்திச் சொல்கின்றது. இரண்டாம் வருகைக்கு முன்னர் இயேசுவின் பரலோக ஊழியம் முடியும்போது மனிதர்களுடைய கிருபையின் காலம் முடிவுற்றுவிடும்.

 

லேவி 16; எபிரெ 4:14-16; எண் 14:34; எபிரெ 8:1-5; தானி 7:9-27; எபிரெ 9:11-28; தானி 8:12,14; எபிரெ 10: 19-22; எபிரெ 9: 24-27; வெளி 14:6,7,12; எபிரெ 1:3; வெளி 20:12; எபிரெ 2: 16,17; வெளி 22:12.

பரலோக பரிசுத்த ஸ்தலத்தில் இயேசுவின் ஊழியம்

Anchor 25

25

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையானது, சபையின் பாக்கியமான நம்பிக்கையாகவும், நற்செய்தி ஊழியத்தின் உச்சகட்டமாக வும் இருக்கின்றது. அப்போது இயேசுவானவர் தாமே வருவார். உலகம் அனைத்தும் அப்போது அவரை பார்க்கும். மரித்த நீதிமான்கள் அவர் வரும்போது உயிர்த்தெழுவார்கள்.  அதேவேளையில் உயிரோடு உள்ள நீதிமான்கள் மறுரூபமாவார்கள்.  இரு கூட்டமும் மகிமையடைந்து பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். ஆனால் துன்மார்க்கர் மரித்து விடுவார்கள்.  தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள பெரும்பாலான காரியங்கள் நிறைவேறி விட்டன. அதோடு, பூமியின் இப்போது நிலைமையைப்  பார்க்கும்போது கிறிஸ்துவின் வருகை சீக்கிரம் இருக்கும் என்பதை அறிய முடிகின்றது. ஆனால் அந்நிகழ்ச்சியின் நேரம் நமக்கு வெளிப்படுத்தப்படவில்லை. எனவே எந்நேரமும் அவர் வருகைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

 

மத்தேயு 24;  2 தெசலோனிக்கேயர் 1: 7- 10; மாற்கு 13 ; 2தெசலோனிக்கேயர் 2:8;  லூக்கா: 21; 2 திமோத் 3:1-5; யோவான் 14:1-3; தீத்து 2:13; அப் 1:9-11; எபி 9:28; 1 கொரிந்  15:51-54; வெளி 1:7; 1 தெச 4:13-18; வெளி 14:14-20; 1தெச 5:1-6; வெளி 19:11-21.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

Anchor 26

26

பாவத்தின் சம்பளம் மரணம்.  அழிவில்லாதவர் தேவன் மட்டுமே. தம்மால் மீட்கப்பட்டவர்களுக்கு அவரே நித்திய வாழ்வை அருளுவார்.  மரித்தவர்கள் அந்த நாள் வரை சுயநினைவின்றி நித்திரை செய்வார்கள்.  நம் ஜீவனான கிறிஸ்து வரும்போது, உயிர்த்தெழுந்த நீதிமான்களும் உயிரோடிருக்கும் நீதிமான்களும் மகிமையடைந்து, ஆண்டவரைச் சந்திக்க எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.  அதன் பிறகு, ஆயிரம் வருடம் கழித்து இரண்டாம் உயிர்த்தெழுதல் நடக்கும்.  அப்போது துன்மார்க்கர் உயிர்த்தெழுவார்கள்.

 

சங்கீதம் 146:3,4; 1கொரிந் 15:51-54; பிரசங்கி 9:5,6; கொலோ 3:4; யோவான் 5:28,29; 1 தெச 4:13-17; யோவான் 11:11-14; 1தீமோத் 6:15,16; ரோமர் 6:23; வெளி 20:1-10.

மரணமும் உயிர்த்தெழுதலும்

Anchor 27

27

முதல் உயிர்த்தெழுதலுக்கும் இரண்டாம் உயிர்த்தெழுதலுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிறிஸ்து தம் பரிசுத்தவான்களோடு ஆயிரம் வருடம் பரலோகத்தில் ஆட்சி செய்வதுதான் ஆயிர வருட அரசாட்சி. மரித்த துன்மார்க்கர் இந்த காலகட்டத்தில் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.  அக்காலத்தில் மனித சஞ்சாரம் இல்லாமல் பூமி பாழாய் கிடக்கும்.  அச்சமயத்தில் சாத்தானும் அவனுடைய தூதர்களும் பூமியில் இருப்பார்கள். ஆயிரம் வருடம் முடிவடையும் போது கிறிஸ்து தம் பரிசுத்தவான்களோடும், பரிசுத்த நகரத்தோடும் பரலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வருவார்.  மரித்த துன்மார்க்கர் அதன்பிறகு, உயர்த்தெழுவார்கள். அவர்கள் சாத்தானோடும், அவனுடைய தூதர்களோடும் சேர்ந்து பரிசுத்த நகரத்தை முற்றுகையிடுவார்கள்.   ஆனால் தேவனிடமிருந்து அக்கினி இறங்கி அவர்களை பட்சித்துப் போட்டு பூமியை சுத்திகரிக்கும் .அதன்மூலம், பாவமும் பாவிகளும் இப்பிரபஞ்சத்தில் இருந்து அகற்றப்படுவார்கள்.

 

எரேமி 4:23-26; 1 கொரிந் 6:2,3; எசேக் 28:18,19; வெளி 20; மல்கி 4:1; வெளி 21:1-5.

ஆயிரம் வருட அரசாட்சியும் பாவத்தின் முடிவும்

Anchor 28

28

நீதி வாசம் செய்கிற இடமாக புதிய பூமி இருக்கும். தம்மால் மீட்கப்பட்ட வர்களுக்கு ஒரு நிரந்தரமான வீட்டை தேவன் அங்கு வழங்குவார். நித்திய வாழ்விற்கும் ,அன்புக்கும், மகிழ்ச்சிக்கும்,அவருடைய பிரசன்னத்தில் கற்பதற்கும் ஏற்ற ஒரு பூரண சூழ்நிலை அங்கு நிலவும். அங்கு தம் மக்களோடு தேவன் தாமே வாசம் செய்வார். உபத்திரவமும் மரணமும் அங்கு காணப்படாது. மாபெரும் போராட்டம் முடிவுக்கு வரும். பாவமும் அழிந்துபோகும்.உயிருள்ள வைகளும் உயிரற்றவைகளுமான சகலமும், "தேவன் அன்புள்ளவர்"என்பதை பறைசாற்றும். அவரே என்றென்றும் ஆட்சி செய்வார் ஆமென்.

 

ஏசாயா 35; வெளி 11:15; ஏசாயா 55:17-25; வெளி 21:1-7; மத்தேயு 5:5; வெளி 22:1-5; 2 பேதுரு 3:13.

புதிய பூமி

bottom of page