top of page
Blue Background

வாரத்தில் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் தான் ஆராதனை செய்ய வேண்டுமா?


வேதம் என்ன சொல்கிறது?


யாத்திராகமம் 20


8. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;


9. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;


10. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்;


ஆறு நாளும் வலை செய் என்றும், ஏழாம் நாள் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் படைத்த தேவனுடைய ஓய்வு நாள் என்றும் அந்த நாளில் தான் ஆராதிக்க வேண்டும் என்றும் வேதம் சொல்கிறது.


வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் தான் தொழுகிறேன் என்பதற்கு ஆதாரமே, தேவன் சொன்னதை போல வாரத்தின் ஏழாம் நாளில் ஆராதிப்பதே ஆகும். தேவன் சொல்லாததை செய்வது கீழ்ப்படியாமை.


வாரத்தின் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் தொழுது கொள்வதே, தேவனுக்கு பிரியமான தொழுகை. ஏனென்றால் அதனை ஏற்படுத்தியவர் அவரே.


எசேக்கியேல் 20 


20. என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.

bottom of page