
நியாயப்பிரமாணத்தின் வகைகள் - 1
வேதத்தில் உள்ள கட்டளைகளை நியாயப்பிரமாணம் என்றே சொல்லப்படுகிறது. ஆனால் அது 4 வகைப்படும்
1. ஒழுக்க பிரமாணம் (ஆங்கிலத்தில் Moral Laws)
2. சடங்காச்சாரா பிரமாணம் (ஆங்கிலத்தில் Ceremonial Laws)
3. சுகாதார/ஆரோக்கிய பிரமாணங்கள் (ஆங்கிலத்தில் Health Laws)
4. நீதி/சிவில் பிரமாணங்கள் (ஆங்கிலத்தில் Civil Laws)
1. ஒழுக்க பிரமாணம் (ஆங்கிலத்தில் Moral Laws)
தேவன் தன்னுடைய கையால் எழுதி கொடுக்கப்பட்ட 10 கட்டளைகள் ஒழுக்க பிரமாணங்கள் (யாத்திராகமம்20 : 2 - 17, உபாகமம் 5 : 6 - 21)
நாம் ஒழுக்கத்தோடு வாழ்வதற்காக கொடுக்கப்பட்ட கட்டளைகள் இவைகள். முதல் நான்கு கட்டளைகள் மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள உறவும், கடைசி ஆறு கட்டளைகள் மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவையும் சொல்கிறது, அதாவது மனிதன் தேவனை எப்படி அன்பு செய்வது, முதல் நான்கு கட்டளைகளிலும், கடைசி ஆறு கட்டளைகளும் மனிதன் மனிதனை எப்படி அன்பு செய்வது பற்றியும் சொல்கிறது.
மத்தேயு 22
36. போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.
37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
I தீமோத்தேயு 1
5. "கற்பனையின் பொருள் என்னவெனில்", சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் "அன்பே".
2. சடங்காச்சாரா பிரமாணம் (ஆங்கிலத்தில் Ceremonial Laws)
இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்தால் என்ன பலி செலுத்தவேண்டும், என்னென்ன பண்டிகைகள் கொண்டாட வேண்டும் என்றெல்லாம் விளக்கமாக கொடுக்கப்பட்டதே இந்த கட்டளைகள்.
உதாரணமாக, ஒருவன் பாவம் செய்தால் அவன் பழுத்தில்லாத ஆட்டை ஆசாரி்ப்பு கூடாரத்தில் பலி செலுத்த கொண்டு வர வேண்டும். ஆடு பலியிட்டு பின் அவன் பாவ நிவாரணம் அடைந்தவனாக தன வீட்டிற்கு செல்கிறான். அந்த ஆடு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.
3. ஆரோக்கிய பிரமாணங்கள் (ஆங்கிலத்தில் Health Laws)
இஸ்ரவேல் ஜனங்கள் சுகாதாரகாக ஆரோக்கியமாக வாழ கொடுக்கப்பட்ட கட்டளைகள் இந்த ஆரோக்கிய கட்டளைகள். உதாரணமாக எவைகளை சாப்பிடலாம் எவைகள் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி தெளிவாக கூறுகிறது இந்த கட்டளைகள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரம் அல்ல, இன்றைக்கும் இந்த ஆரோக்கிய பிரமாணங்கள் நமக்கு பொருத்தமாக இருக்கிறது.
உதாரணமாக, பன்றி இறைச்சியை தேவன் சாப்பிடக்கூடாது என்று தெளிவாக கூறினார். இன்றைக்கு மருத்துவர்கள் நாம் பன்றி இறைச்சி சாப்பிட்டால் பலவிதமான நோய்கள் வருமென்று சொல்கின்றனர். அன்று தேவன் கொடுத்த சுகாதார சட்டங்கள் இன்றும் நமக்கு பொருத்தமாக இருக்கிறது.
இதை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள இதனை கிளிக் செய்யவும்
4. சமுதாய/சிவில் பிரமாணங்கள் (ஆங்கிலத்தில் Laws)
இஸ்ரவேலர்களுக்கு தேவன் அரசாங்க மற்றும் சமூக சட்டங்களை கொடுத்திருக்கிறார். இந்த வசனத்தின் அம்சங்கள் இன்றைக்கும் நமக்கு இது தேவைப்படுகிறது.