
நியாயப்பிரமாணம் - சடங்காச்சாரா பிரமாணம் (ஆங்கிலத்தில் Ceremonial Laws)
இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்தால் என்ன பலி செலுத்தவேண்டும், என்னென்ன பண்டிகைகள் கொண்டாட வேண்டும் என்றெல்லாம் விளக்கமாக கொடுக்கப்பட்டதே இந்த கட்டளைகள்.
உதாரணமாக, ஒருவன் பாவம் செய்தால் அவன் பழுத்தில்லாத ஆட்டை ஆசாரிய்ப்பு கூடாரத்தில் பாலி செலுத்த கொண்டு வர வேண்டும். ஆடு பலியிட்டு பின் அவன் பாவ நிவாரணம் அடைந்தவனாக தன வீட்டிற்கு செல்கிறான்.
எந்த பாவம் செய்தால் ஆட்டை பாலி செலுத்த கொண்டு வர வேண்டும்?
I யோவான் 3
4. பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
ரோமர் 6: 23. பாவத்தின் சம்பளம் மரணம்;
தேவனுடைய கட்டளையை மீறுவது பாவம் என்கிறது வேதம். ஒருவன் தேவனுடைய 10 கட்டளைகளில் எந்த கட்டளையை மீறினாலும் அது பாவமே. இந்த பாவத்திற்கு பரிகாரம், தேவன் ஆட்டை பலியிட சொன்னார்.
ஆட்டை பலியிட்டதால் அல்ல, அந்த பழுதற்ற ஆடு, இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது. அவரே பலியாகி பாவங்களை மணிக்கிறார் என்பதை சொல்கிறது.
இந்த சடங்காச்சார பிரமாணங்களை, இயேசு சிலுவையில் நமக்காக பலியாகி ரத்தம் சிந்தி அறைந்து விட்டார். இதனால் இன்றைக்கு நாம் பாவம் செய்யும் போது, ஆட்டை பலியிட தேவை இல்லை; ஏனென்றால் நமக்காக சிலுவையில் பலியானார் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
கொலோசெயர் 2
14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
15. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
இந்த பலிமுறைகளுக்கடுத்த கட்டளைகளை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்தால், நாம் இன்று இந்த சடங்காச்சார கட்டளைகள் தேவை இல்லை.
பலிமுறைக்கடுத்த/ சடங்காச்சார பிரமாணங்கள்
யாத்திராகமம் 29
லேவியராகமம் 1 (எப்படி, என்ன பலியிட வேண்டும் )
லேவியராகமம் 2 (போஜன பலி)
லேவியராகமம் 3 (சமாதான பலி)
லேவியராகமம் 4 (பாவநிவாரண பலி)
லேவியராகமம் 5, 6:6 (குற்றநிவாரண பலி)
லேவியராகமம் 7
லேவியராகமம் 16 (கர்த்தரின் ஆடு, போக்காடு, ஆசாரியன் எப்படி வரவேண்டும்)
லேவியராகமம் 17
லேவியராகமம் 22:1-7, 10-30
லேவியராகமம் 23
லேவியராகமம் 27
எண்ணாகமம் 15