நியாயப்பிரமாணம் - ஆரோக்கிய பிரமாணங்கள் (ஆங்கிலத்தில் Health Laws)
இஸ்ரவேல் ஜனங்கள் சுகாதாரகாக ஆரோக்கியமாக வாழ கொடுக்கப்பட்ட கட்டளைகள், இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரம் அல்ல, இன்றைக்கும் இந்த ஆரோக்கிய பிரமாணங்கள் நமக்கு பொருத்தமாக இருக்கிறது.
உதாரணமாக, பன்றி இறைச்சியை தேவன் சாப்பிடக்கூடாது என்று தெளிவாக கூறினார். இன்றைக்கு மருத்துவர்கள் நாம் பன்றி இறைச்சி சாப்பிட்டால் பலவிதமான நோய்கள் வருமென்று சொல்கின்றனர். அன்று தேவன் கொடுத்த சுகாதார சட்டங்கள் இன்றும் நமக்கு பொருத்தமாக இருக்கிறது.
எவைகளை சாப்பிடலாம் எவைகளை சாப்பிடக்கூடாது என்று லேவியராகமம் 11, உபாகமம் 14 சொல்கிறது
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இதனை கிளிக் செய்யவும்
உதாரணம்..கொழுப்பை சாப்பிட்டால், பலவிதமான நோய்கள் வருகிறதென்று, ரத்தத்தின் மூலம் நோய்கள் பரவுகிறது இன்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் தேவன் அன்றே இஸ்ரவேல் மக்களிடம், இன்றைய மக்களுக்கு'
ஆலோசனையை கொடுத்திருக்கிறார். வசனங்கள் கீழே...
கொழுப்பு புசிக்கக்கூடாது
லேவி 3: 17. கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.
லேவியராகமம் 7
23. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது.
24. தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது.
25. கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
இரத்தம் புசிக்கக்கூடாது
லேவியராகமம் 7
26. உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.
27. எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இதனை கிளிக் செய்யவும்