top of page
Blue Background

நியாயப்பிரமாணம் - ஒழுக்க பிரமாணம் (ஆங்கிலத்தில் Moral Laws)

தேவன் தன்னுடைய கையால் எழுதி கொடுக்கப்பட்ட 10 கட்டளைகள் ஒழுக்க பிரமாணங்கள் (யாத்திராகமம்20 : 2 - 17, உபாகமம் 5 : 6 - 21)


10 கட்டளைகள் சுருக்கமாக 


1. என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உங்களுக்கு உண்டாயிருக்க வேண்டாம்.


2. விக்கிரகங்களை உருவாக்கி அதை வணங்க வேண்டாம்.


3. உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாக்க வேண்டாம்.


4. ஓய்வுநாளைக் பரிசுத்தமாக கடைப்பிடித்து, அதைப் கொண்டாடுங்கள்.


5. உங்கள் தந்தையையும் தாயையும் மதிக்கவும்.


6. கொலை செய்யாதீர்கள்.


7. விபச்சாரம் செய்யாதே.


8. நீங்கள் திருட வேண்டாம்.


9. பொய் சாட்சி சொல்ல வேண்டாம்.


10. பிறருக்குரிய எந்த ஒன்றையும் இச்சிக்க  வேண்டாம் 



இந்த கட்டளைகள் இன்றும் நமக்கு தேவையாய் இருக்கிறது. இந்த 10 கட்டளைகளை மீறுவது பாவம் என்று வேதம் நமக்கு சொல்கிறது.


I யோவான் 3 


4. பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.


ரோமர் 6: 23. பாவத்தின் சம்பளம் மரணம்; 


நாம் தேவனிடம் அன்பு செய்கிறோம் என்றால், தேவனின் கட்டளைகளை கைக்கொள்ள வேண்டும். கட்டளைகளை  கைக்கொள்ளாமல் நாம் எப்படி அவரை அன்பு செய்ய முடியும்?


I யோவான் 5: 3. நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.


இயேசு கிறிஸ்து இப்படியாக சொல்கிறார்...


யோவான் 14: 15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.


இந்த பத்து கட்டளைகள் நம்மை மீட்கப்போவது இல்லை, ஆனால் நாம் பாவம் செய்யும் போது, பாவம் செய்து விட்டோம் என்பதை சுட்டிக்காட்டும். 10 கட்டளைகள் ஒரு கண்ணாடி போன்றது, இந்த கண்ணாடி முன்பு நாம் நின்று பார்க்கும் போது நம்முடைய பாவங்களை அது நமக்கு காட்டுகிறது. தேளும் அது நம்மை தேவனிடம் வழிநடத்தி சென்று தேவனிடம் பாவ மன்னிப்பு பெற்று கொள்ள செய்கிறது. 


இப்படி தேவனுடைய கற்பனைகளால் வழிநடத்தப்பட்டு, பாவமற்ற பரிசுத்த வாழ்வு வாழும் போது, தேவன் நமக்கு பரலோகத்தை தருகிறார்.


வெளி 22: 14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.


இந்த பத்து கட்டளைகள் மனித இனத்திற்கே அடிப்படையானது, இது இன்றைக்கும், என்றைக்கும் மனுக்குலத்திற்கு தேவை என்று வேதம் சொல்கிறது.



bottom of page