top of page
Blue Background

தேவனுடைய முத்திரை எது?

1. முத்திரையில் என்ன இருக்கும்?


முத்திரையில் இருக்கும் மிக மூன்று  முக்கியமான காரியங்கள்.


- ஆளுகிறவரின் பெயர்

- ஆளுகிறவரின் பதவி

- ஆளுகை செய்யும் இடம்


இந்த மூன்றில் ஒன்று இல்லை என்றாலும், எழுதப்பட்ட ஆவணம் செல்லாது.


2. வேதத்தில் இந்த முத்திரை எங்கு இருக்கிறது?


யாத்திராகமம் 20


8. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;


11. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.


ஆளுகிறவரின் பெயர்: கர்த்தர்

ஆளுகிறவரின் பதவி: சிருஷ்டிகர்

ஆளுகை செய்யும் இடம்: வானம், பூமி, சமுத்திரம்


தேவன் தன சொந்த விரலால் எழுதி கொடுத்த 10 கட்டளைகளில் உள்ள நாலாம் கட்டளையே தேவனுடைய முத்திரை.


3. தேவனை தான் தொழுகிறேன் என்பதற்கு அடையாளம் என்ன? தேவனுடைய முத்திரையை எப்படி பெற்றுக்கொள்வது?


தேவன் கொடுத்த பத்து கட்டளையில் உள்ள நாலாம் கட்டளையில், அதாவது வாரத்தின் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் தொழுது கொள்வது, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் படைத்தவரை தொழுது கொள்வதாகும். வாரத்தின் ஏழாம் நாள் சனிக்கிழமை.


எசேக்கியேல் 20


12. நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.


யாத்திராகமம் 31


13. நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.


4. தேவன் மனிதனோடு செய்யும் உடன்படிக்கை என்ன?


எரேமியா 31


33. அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எபிரெயர் 10


16. அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு,


5. அப்படியானால் தேவனுடைய முத்திரை எது?


நாம் தேவன் சொன்னபடி அவரை தொழுதுகொள்ளும் பொது மட்டுமே தேவனுடைய முதியையால் முத்தரிக்கிறார் என்று வேதம் சொல்கிறது. 


6. தேவன் சொன்ன வாரத்தின் ஏழாம் நாளாகிய பரிசுத்த ஓய்வு நாளில் ஆராதிக்காமல், மற்ற நாளில் தொழுது கொண்டால் தேவன் ஏற்றுக்கொள்ள மாட்டாரா?


தேவனை எந்த நாளிலும் எந்த நேரத்திலும் தொழுது கொள்ளலாம். அதற்காக தேவன் ஏற்படுத்தின வாரத்தின் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் தொழுது கொள்ள வேண்டாம், மற்ற நாளில் தொழுது கொண்டாலும் தேவனை தொழுது கொள்ளலாம் என்பது தான் வேதத்திற்கு முரணான கருத்து.


-இயேசு கிறிஸ்து வாரத்தின் ஏழாம் நாளாகிய பரிசுத்த ஓய்வு நாளை மாற்றவில்லை 

-இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தால், ஓய்வு நாள் மாறிவிட்டதாக வேதத்தில் எங்குமே இல்லை  

-அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஓய்வு நாளை மாற்றவில்லை 


அப்படியானால், தேவன் சொன்ன பரிசுத்த ஓய்வு நாள், வாரத்தின் ஏழாம் நாளாகிய சனிக்கிழமை.


7. வாரத்தின் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளை தேவன் யூதர்களுக்கல்லவா கொடுத்தார்?


- தேவன் ஆதாம் ஏவாளுக்கு ஓய்வு நாளை கட்டளையிட்டார். ஆதி பெற்றோர் யூதர்கள் அல்ல.


- ஆபிரகாம் ஏன் கட்டளைகளும் கற்பனைகளும் கைக்கொண்டார் (ஆதி 26:5) என்கிறது வேதம். ஆபிரகாம் யூதர் அல்ல.


- மோசே காலம் வரை செவி வழி செல்வமாக தேவனின் போதனைகள் போதிக்கப்பட்டது 


- மோசேயின் காலத்தில், தேவன் 10 கற்பனைகளை சீனாய் மலையில், இஸ்ரவேல் ஜனங்களுக்கு எழுத்து வடிவம் ஆக்கினார்.


மாற்கு 2:27 - ல், ஓய்வு நாள் மனிதனுக்காக கொடுக்கப்பட்டது என்றே சொல்கிறார். யூதர்களுக்கு மாத்திரம் என்று சொன்னால், ஓய்வு நாள் யூதர்களுக்கென்று அல்லவா சொல்லவேண்டும்?


ஓய்வு நாள் மாறவில்லை. ஓய்வு நாள், மனுக்குலத்திற்க்காக கொடுக்கப்பட்டது.

bottom of page