top of page
Blue Background

பாவம் என்றால் என்ன?


I யோவான் 3


4. பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.


நியாயப்பிரமாணத்தை மீட்டுகிறது பாவம் என்று வேதம் சொல்லுகிறது. வேதத்தில் உள்ள நியாயப்பிரமாணம் எது? 


ரோமர் 7


7. ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.


8. பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.


நியாயப்பிரமாணத்தின் இசையாதிருப்பாயாக என்ற உதாரணத்தை பவுல் எடுத்து காட்டுகிறார். இந்த 'இசையாதிப்புப்பாயாக' என்ற கட்டளை எங்குள்ளது என்று பார்த்தல், தேவன் கொடுத்த 10 கட்டளைகளில் உள்ள பத்தாம் கட்டளை. அந்த கட்டளையை மீறினால் நாம் பாவம் செய்கிறோம், ஏனென்றால் 'தேவனுடைய கட்டளையை மீறுவது பாம்' என்று 1 யோவான் 3:4 சொல்கிறது. இதை போல 10 கட்டளைகளில் உள்ள எந்த ஒரு கட்டளையை மீறினாலும் பாவம் என்கிறது வேதம்.


யாக்கோபு 2


10. எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.


அப்படியானால் 10 கட்டளைகளில் உள்ள ஒரு கட்டளையை மீறினால் அது பாவமே. 


மற்றொரு உதாரணம். 10 கட்டளைகளில் உள்ள நான்காம் கட்டளை 'ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசாரிக்க நினைப்பாயாக'. வாரத்தில் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் தேவனை ஆராதிக்க தேவன் சொல்லும் கட்டளை. வாரத்தின் முதல் நாள் ஞாயிற்று கிழமை, வாரத்தின் ஏழாம் நாள் சனிக்கிழமை, அதுவே ஏழாம் நாள். தேவன் கொடுத்த எதை ஒரு கட்டளையும் மீறினால் பாவமே.


பாவம் செய்யும் பொது, அந்த பாவத்தை விட்டு தேவனுக்கு கீழ்ப்படிந்து, தேவனிடம் வரவே தேவன் விரும்புகிறார். தேவனுடைய பத்து கட்டளைகளுக்கு கீழ்ப்படிவோம், தேவனுக்கு பிரியமாய் வாழுவோம்.

bottom of page