top of page

தேவனுடைய முத்திரை  எது?

பொதுவாக முத்திரை எதற்கு பயன்படுகிறது ?

சட்ட ஆவணத்தை செயல்படுத்த அல்லது ஆவணத்தின் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க முத்திரை பயன்படுத்தப்படுகிறது. 

முத்திரையில் என்ன இருக்கும்?

முத்திரையில் இருக்கு மூன்று மிக முக்கிய காரியங்கள் 
- ஆளுகிறவரின் பெயர் 
- ஆளுகிறவரின் பதவி 
- ஆளுகை செய்யும் தேசம் 

எந்த காரியங்களுக்கு முத்திரை பயன் படுகிறது?

ஒரு சட்டத்தை இயற்றும் போது, அதில் சட்டத்தை ஏற்றுபவரின் முத்திரை பதியப்படும். அந்த சட்டம் பின்பற்றப்படவேண்டிய சட்டம். சட்டம் ஏற்றியவரின் கையொப்பமும், முத்திரையும் அந்த சட்டத்திற்கு உயிர் கொடுக்கிறது. முத்திரை இல்லாமல், அந்த சட்டம் இயற்றியவர் யார் என்று அறிய முடியாது.

தேவனுடைய சட்டம் எது?

பத்து கட்டளைகள் (யாத்திராகமம் 20: 1-17)

தேவன் கொடுத்த பத்து கட்டளையை, தேவன் முத்திரையிட்டுருக்கிறாரா?? முத்திரையில் இருக்கும் அம்சங்கள் இந்த பத்து கட்டளையில் இருக்கிறதா?

நான்காம் கட்டளை அதனை சொல்கிறது.

யாத்திராகமம் 20

11. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

- ஆளுகிறவரின் பெயர் (கர்த்தர்)
- ஆளுகிறவரின் பதவி (
உண்டாக்கி, அதாவது படைத்தவர் )
- ஆளுகை செய்யும் தேசம் (
வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும்)

இந்த நான்காம் கட்டளையாகிய ஓய்வு நாளில், அதாவது வாரத்தின் ஏழாம் நாளில் தேவனை ஆராதிப்பாயாக என்று சொல்கிறதே... இது எப்படி முத்திரை ஆகும்?

பத்து கட்டளையில் உள்ள நான்காம் கட்டளை,  தேவனின் முத்திரையை சொல்கிறது. இந்த முத்திரை, தேவன் அவர் சொன்னபடி செய்கிறவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதாவது, வாரத்தின் ஏழாம் நாளில் தேவனை ஆராதிக்கும் போது அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் ஆகிறார்கள். 

எப்படி இந்த முத்தியை கொடுக்கப்படுகிறது?

எசேக்கியேல் 20: 

12. நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.

20. என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.

 

தேவனுடைய பிள்ளைகள், தேவன் சொன்ன கட்டளைப்படி, ஏழாம் நாளில் தேவனை ஆராதிக்கும் போது , அதுவே நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு அடையாளம் என்று வேதம் சொல்கிறது.

ஏழாம் நாளில் ஆராதிக்காமல், மற்ற நாளில் ஆராதித்தால், தேவன் தேவன் ஏற்றுக்கொள்ளாமல், நம்மை தள்ளி விடுவாரா?

நாம் தேவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்றே தேவன் விரும்புகின்றார். அறியாமல் நாம் செய்யும் தவறுக்கு, நாம் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை; ஆனால் அறிந்த பிறகு, வேதத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமென்று தேவன் விரும்புகின்றார்.

 

அப்போஸ்தலர் 17: 30. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

தேவனுடைய கட்டளையை கைக்கொள்ளுகிறவனுக்கு பலன் என்ன?

வெளி 22 : 14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் போது, ஜீவவிருட்சத்தை கொடுக்கிறார். தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது மிகவும் அவசியமாய் இருக்கிறது.

பரலோகத்தில், ஓய்வுநாள் உண்டா? ஓய்வுநாளில் தான் ஆராதிப்பார்களா?

ஏசாயா 66: 

22. நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

23. அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

bottom of page