120. எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன் - நான்

எங்கே தேடுவேன்

என் நேசர் இயேசுவை

நான் எங்கே தேடுவேன்


உன்னத ராஜனே,

ஆ! என்! உத்தம நேசரே

உம் உன்னத அன்பாலே

ஆ! என்! உள்ளம் உருகுதே


மலரின் நடுவிலோ 

நேசரை மல்லிகை வனத்திலோ 

மாடி மேடையிலோ 

இல்லையேல் மன்னர் மத்தியிலோ


காட்டுமரங்களுள் நேசர்

கிச்சிலி மரம்போலாம்

கமழும் மலர்களுள் நேசர்

இன்ப லீலியாம்


அழகு வாய்ந்தவர் - நேசர்

அன்பு மிகுந்தவர்

அறிவு மிகுந்தவர் - நேசர்

அனைத்தும் அறிபவர்


அழகாய்  மான்போலே - நேசர்

அலைந்து வாராரே

அரச குமாரருள்

ஆ என் அன்பர் ஒருவரே


காலைத் தேடுவேன் நேசரைக்

கண்டு மகிழ்வேன்

கருத்தாய்  பாடுவேன் நேசரின்

காதல் நாடுவேன்