128. வான பிதா தந்த ஆஸ்தி

வான பிதா தந்த ஆஸ்தியிலே

ஏழைகட்குன் மனம் கோண வேண்டாம்

வாங்குவதை விட கொடுப்பதுவே

நல்லதென்று கர்த்தர் சொல்லுகிறார்.


தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரே;

கேட்கிறாரே, கேட்கிறாரே;

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரே;

கேட்கிறாரே, உங்களை


ஏழைகள் நம்மோடெக் காலமுமே

இருப்பதை நாமும் காண்கிறோமே

ஏழைக் கிரங்குவோர் கர்த்தருக்குக்

கடன் கொடுப்பவர் ஆகுவாரே.


பூமியில் பொக்கிஷம் என்னத்துக்கு

கன்னமிட அது கள்ளருக்கோ?

வானத்தில் பொக்கிஷம் சேர்த்து வைத்தால்,

ஏகோவா உன்னை ஆசீர்வதிப்பார்.


ஆலயத் தூழியர் காணிக்கையை

ஆண்டவர் காணிக்கையாக எண்ணு

நல் மனதோடதை ஈய வேண்டும்

நாயனுன் மனதைப் பார்க்கிறாரே


மரம் நட்டுப் பலன் நோக்குவானே;

மந்தை மேய்த்தவன் பாலுண்ணுவானே

தேவ சபையின் நல்வேலை எல்லாம்

ஆதரிப்பாரின்றிப் போகலாமோ?