top of page
147. இன்று கண்ட எகிப்தியனை
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இஸ்ரவேலை காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை
தண்ணீரை நீ கடக்கும் போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியால் கொடியேற்றிடுவார்
கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய்
வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார்
பாதையிலே காக்கும் படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார்
சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார்
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார்
bottom of page