156. தேவாதி தேவனுக்கு நன்றி

தேவாதி தேவனுக்கு நன்றி 

நம் கர்த்தாதி கர்த்தருக்கு நன்றி 

ராஜாதி ராஜனுக்கு நன்றி 

நம் இயேசு ராஜாவுக்கு நன்றி                  


ஆதியும் அந்தமும் ஆனவரே 

ஆதாமை ஏவாளை படைத்தவரே 

பெயர் சொல்லி என்னை மீட்டாரே 

பெலனும் சங்கீதமும் ஆனவரே 


தாவீதை மன்னித்த மாகர்த்தரே 

தானியேலை குகையில் காத்தவரே 

பரிசுத்த வாழ்வை ஈந்தாரே 

பாவங்கள் முற்றிலூம மன்னித்தாரே


தயவும் இரக்கமும் கொண்டவரே 

தகப்பனாய் என்றும் அணைப்பவரே 

விண்ணப்பத்தை நின்று கேட்பவரே 

விந்தையாய் அதிசயம் செய்தாரே