top of page
160. சத்திய வேதம் பக்தரின் கீதம்
சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனை தேற்றிடும் ஒளஷதம்
வேதப் பிரியர் தேவப் புதல்வர்
சேதமடையா நடத்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்
உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்
வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது தியானம்
பரவசம் நிதம் அருளும்
bottom of page