top of page
230. உந்தன் செட்டை நிழலில்
உந்தன் செட்டை நிழலில்
இளைப்பாறலாம்!
எந்தன் பாடும், துன்பம், தீங்கும்,
சற்றும் அணுகாமல் நீங்கும்,
உந்தன் செட்டை நிழலில் இளைப்பாறலாம்!
உந்தன் செட்டை நிழலில் இளைப்பாறலாம்!
தங்குவேன், தங்குவேன், தங்குவேன்.
உந்தன் செட்டை நிழலில்.
சுகிப்பேன், சுகிப்பேன், சுகிப்பேன்
உந்தன் செட்டை நிழலில்
உந்தன் செட்டை நிழலில் சமாதானமாம்,
நெஞ்சின் நோவு முற்றும் ஆறும்;
துன்பம் இன்பமாக மாறும்;
உந்தன் செட்டை நிழலில் சமாதானமாம்!
உந்தன் செட்டை நிழலில் சமாதானமாம்!
உந்தன் செட்டை நிழலில் பேரானந்தமாம்!
போற்றுவேன் சந்தோஷமாக;
பாடுவேன் கெம்பீரமாக;
உந்தன் செட்டை நிழலில் பேரானந்தமாம்!
உந்தன் செட்டை நிழலில் பேரானந்தமாம்!
bottom of page