231. அநாதி நித்யராஜா

அநாதி நித்யராஜா, முன்செல்லும் நாள இந்நாள் 

வெல்லும் போர்க் களத்திலும், எம் வீடு உம் குடில்

ஆயத்த நாட்களிலும் கிருபை வீரராக்கும்

நடத்தும் நித்யராஜா, போர் இசை மீட்டுவோம்


நடத்தும் நித்யராஜா, பாவப்போர் ஓயும் நாள்

தூயத்வ இன்ப ஆமென் ஓதும் சமாதானம்

வாள் மோதும் சத்தம் அல்ல, கொட்டும் முரசொலியல்ல,

அன்பு கிருபையாலே தேவராஜ்யம் வரும்.


அநாதி நித்யராஜா உம்பின்னே செல்லுவோம்

உம் இன்ப முகம் எங்கும் காண்பேன் பயமில்லை

சிலுவை ஒளி நோக்கிப் பயணம் செல்லுவேன்

நடத்தும் வல்ல தேவா, க்ரீடம் வென்றோனுக்கே