top of page

246. வல்ல தேவன் கூறுவித்துச்

வல்ல தேவன் கூறுவித்துச்

சொல்லும் வாக்கைக் கேளுமே;

'உந்தன் மேல் என் கண்ணை வைத்து

என்றும் பாதை காட்டுவேன்'


'உந்தன் மேல்' என் கண்ணை வைத்து

என்றும் பாதை காட்டுவேன்;

இன்ப மோட்சம் சேருமட்டும்

என்றும் பாதை காட்டுவேன்.


சாத்தான், மாம்சம், லோகத்தாலும்

ஆத்மா சோர்ந்து போவதேன்?

எந்தன் ஆவி, வாக்கினாலும்

என்றும் பாதை காட்டுவேன்.


துன்பம், துக்கம் நேரிட்டாலும்

இன்பமாக மாற்றுவேன்;

என்ன சோதனை வந்தாலும்

என்றும் பாதை காட்டுவேன்;


சாவின் பள்ளத்தாக்கிலேயும்

ஜீவ ஜோதி வீசுவேன்;

உன்னைச் சேர்த்து விண்ணிலேயும்

என்றும் பாதை காட்டுவேன்;

bottom of page