top of page

285. இயேசு என்ற திருநாமத்திற்கு

இயேசு என்ற திருநாமத்திற்கு

எப்போதுமே மிகத் தோத்திரம்


வானிலும் பூவிலும் மேலான நாமம்

வல்லமையுள்ள நாமமது

தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது

- இயேசு என்ற திருநாமத்திற்கு


வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த

வீரமுள்ள திரு நாமமது

நாமும் வென்றிடுவோம் 

இந்த நாமத்திலே

- இயேசு என்ற திருநாமத்திற்கு


பாவத்திலே மாலும் பாவியை மீட்கப்

பாரினில் வந்த மெய் நாமமது

பரலோகத்தில் சேர்க்கும் நாமமது

- இயேசு என்ற திருநாமத்திற்கு


உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்

உன்னத தேவனின் நாமமது

உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது

- இயேசு என்ற திருநாமத்திற்கு


சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்

தாங்கி நடத்திடும் நாமமது

தடை முற்று மகற்றிடும் நாமமது

- இயேசு என்ற திருநாமத்திற்கு

bottom of page