67. சொந்தமாகுவோம் நாம்

சொந்தமாகுவோம், நாம் பந்தமாகுவோம் 

இயேசுவுக்கே நம்மைச் சுற்றமாக்குவோம் 

ஆண்டவர் இயேசுவின் 

அழைப்பினைக் கேட்டு 

நமது குடும்பத்தையும் சொந்தமாக்குவோம் 


சொந்தமாக்குவோம் நம்மைச் சொந்தமாக்குவோம்

இயேசுவுக்கே நம்மைச் சுற்றமாக்குவோம் 

சொந்தமாக்குவோம் நம்மைச் சொந்தமாக்குவோம்

அர்ப்பணித்தே நம்மை ஒப்புக் கொடுப்போம் 


திருச்சபையில் தேவன் எழுந்தருள 

திருச்சபையை நாம் சொந்தமாக்குவோம் 

திருக்கரம் நீட்டி நம்மை இரட்சித்த 

ஜீவ தேவனை சொந்தமாக்குவோம் 


அவர் அடிச்சுவட்டிலே நாம் நடந்தால் 

ஆத்துமாக்களை நாம் சொந்தமாக்குவோம் 

தேனினும் இனிய வசனத்தைக் கூறி 

இந்த உலகத்தை சொந்தமாக்குவோம்