7. ஸ்தோத்திரம் இயேசு நாதா

ஸ்தோத்திரம் இயேசு நாதா 

உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா 

ஸ்தோத்திரம் செய்கிறோம் 

நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில்! 


வான துதர் சேனைகள் 

மனோகர கீதங்களால் எப்போதும் 

ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும் 

மன்னவனே உமக்கு! 

- ஸ்தோத்திரம் இயேசு நாதா 


இத்தனை மகத்துவமுள்ள 

பதவி இவ் வேழையாம் எங்களுக்கு 

எத்தனை மாதயவு, நின் கிருபை! 

எத்தனை ஆச்சரியம்! 

- ஸ்தோத்திரம் இயேசு நாதா 


இன்றைத் தினமதிலும் 

ஒருமித்துக் கூட உம் நாமத்தினால் 

தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும் 

ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே! 

- ஸ்தோத்திரம் இயேசு நாதா 


நீரல்லால் எங்களுக்குப் 

பரலோகில் யாருண்டு ஜீவ நாதா! 

நீரேயன்றி இகத்தில் வேறொரு 

தேட்டமில்லை பரனே!

- ஸ்தோத்திரம் இயேசு நாதா