76. மகிமையின் ராஜா மகிமையோடு

மகிமையின் ராஜா மகிமையோடு

வருகின்றார் மேகமதில்


ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே

ஆனந்தமே பேரானந்தமே - (2) 


பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க

தூதர் தொனியுடனே

மேகமீதில் வருவார்.

அன்பர்கள் நாங்கள்

இயேசுவைச் சந்திப்போம்

ஆனந்தம் ஆனந்தமே.


ஆசை மகிபனவர் பிதாவின்

மகிமையோடு

நேச மணவாட்டியை

மறுரூபமாக்க வருவார்.

ஆவலாய் நாமும்

இயேசுவைச் சந்திப்போம்

ஆனந்தம் ஆனந்தமே.