அழுகின்றவர்களுடனே அழுங்கள்

ஒரு பண்ணையாரில் வீட்டிலே ஒரு எலி அதிகமாகத் தொல்லை கொடுத்ததாம். அதனைப் பிடிக்க அந்த பண்ணையாரின் மனைவி எலிப் பொறி வாங்கி வைத்தார்களாம்.

இதனைக் கவனித்த எலி ஒரு வான்கோழி, நாட்டுக் கோழி மற்றும் ஒரு ஆட்டினமிடமும் போய் புலம்பினதாம். என் வாய் வேறு சும்மா இருக்காது . மறதியிலே இதனைக் கரும்பி விடுவேனேனே என்று ஆதங்கப்ட்டதாம்.

அந்த மூன்று மிருகங்களும் அது உன் பாடு.. நாங்கள் ஒன்றும் அந்த பொறியில் உள்ள உணவைத் திண்பதற்கு ஒரு எலி அல்ல என்று நிர்விசாரமாக பதிலளித்தவாம்.

அன்று இரவே பொறியில் பிராணி சிக்கிய சத்தம் கேட்டு, பண்ணையாரின் மனைவி ஆர்வக் கோளாறில் விளக்கு கூடப் போடாமல் அந்தப் பொறியைத் தூக்கினாராம். உடனே எதோ ஒன்று கடித்து விஷம் ஏறுவதை உணர்ந்து கத்தினார்களாம். பக்கத்தில் உள்ளவர்கள் விளக்கைப் போட்டுப் பார்க்கும் போது அவர்களைக் கடித்தது எலி அல்ல.. பொறியில் வைத்த உணவை உண்பதற்காக வந்த பாம்பு என்று கண்டார்களாம்.

அதிக கஷ்டப் பட்டு அவர்களது விஷத்தை முறித்தப் பின்னர் இன்னும் அதன் பக்கவிளைவாகிய காய்ச்சல் இறங்காததைக் கண்டு டாக்டர் ஒரு நாட்டுக் கோழி சூப் கொடுத்தால் சரியாகி விடும் என்றாராம். அவ்வாறே வீட்டில் வந்து நாட்டுக் கோழி சுப் போட்டுக் கொடுத்தார்களாம்.

பண்ணையாரின் மனைவி குணம் அடைந்து வீடு திரும்பியதை அறிந்த அநேகர் அவர்களது நலன் விசாரிக்க வந்தார்கள். வந்தவர்களை உபசரிக்க அவர்கள் வளர்த்த வான் கோழி விருந்து செய்தாராம்.

பண்ணையார் மீண்டுமாக தனது மனைவியின் உடல் நலனை அறிய டாக்டரை அனுகிய போது அவர் உங்கள் மனைவி பூரண சுகம் அடைந்து விட்டார்கள் என்ற சான்றிதழை அளித்தாராம். சந்தோஷ மிகுதியால் அந்த கிராமத்திற்கே அவர் தம் வீட்டிலே இருந்த ஆட்டை அடித்து பிரியாணி போட்டு சந்தோஷம் அடைந்தாராம்.

அந்த பண்ணையாரின் மனைவி இந்த எலிப் பொறியினால் வந்த பாடு போதும் என்று சொல்லி அதைச் தூக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தார்களாம்.

இந்த சகல நிகழ்வுகளையும் அந்த எலி பார்த்துக் கொண்டே இருந்ததாம்.

தங்களுடைய வருத்தந்தங்களைத் தங்களோடு பகிர்ந்து கொள்பவர்களோடு நமது அனுதாபங்களைத் (Sympathy) தெரிவித்துக் கொள்ளுவதைத் தாண்டி நமது பச்சாத்தாபங்களோடு (Empathy) அவர்களது பிரச்சனைகளோடும், போராட்டங்களோடும் இணைந்து கொள்ளுகிறோமா?

மாறாக அந்த தகவல்களைச் சேகரித்துக் கொண்டு அவர்களைப் பற்றிய தவறான கருத்துக்களைப் (Spreading rumours) பரப்புபவர்களாக மாறுகின்றோமா?

அப்பாவியாகத் தங்களது பிரச்சனைகளை நம்மோடு பகிர்ந்து கொள்ளுகிறவர்களின் ஆதங்கங்களை வைத்து அவர்களது தரத்தையும் தாழ்த்தி மதிப்பீடு செய்கிறோமா?

அழுகிறவர்களோடே நாம் அழாததால் பணிபுரியும் இடங்களிலே ஏக சிந்தை ஏற்படவில்லை; நம்மையே நாம் புத்திமான் என்று எண்ணிக் கொண்டு எல்லாரோடும் பிணக்குகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இது தான் நம்மையே தேவனுக்குப் பிரியமுனான ஜீவ பலியாக நம்மை ஒப்புக் கொடுத்தல் என்று அறிந்தோமானால், தங்களது பிரச்சனைகளோடு நம்மை சந்திக்கிறவர்களுக்கு நாம் சுமை தாங்கியாக மாறி விடுவோமே?