சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்
தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.. சங்கீதம் 41:1
சிறுமைப்பட்டவர்கள் என்பது மிகவும் எளிமையானவர்கள்..யாராலும் விசாரிக்கப்படாதவர்கள்..மற்றவர்களால் அசட்டைப்பண்ணப்பட்டவர்கள்..அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறவர்கள் மேல் உங்கள் சிந்தை இருக்கட்டும்..உங்கள் பகுதியில் உள்ள சிறுமையானவர்கள், உங்கள் குடும்பத்தில் உள்ள சிறுமையானவர்கள், நீங்கள் பார்க்கிற சிறுமையானவர்களை நினைத்து அவர்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை செய்யுங்கள்..
உங்களை ஆண்டவர் நன்றாக வைத்திருப்பது அநேகருக்கு நீங்க ஆசீர்வாதமாக இருக்கவேண்டும் என்பதற்காக..சிறுமையானவர்களை உதவும்போது உங்கள் உள்ளத்தை சந்தோஷத்தினால் நிரப்புவார்...உதவிகளை செய்யும் போது ஆண்டவர் உங்களை எல்லா தீங்குக்கும் விலக்கி விடுவிப்பார்..உலகமெங்கும் தீங்குகள் வந்தாலும் உங்களுடைய நற்செயல் மூலம் ஆண்டவர் உங்களையும் உங்க குடும்பங்களையும் எல்லாரையும் காத்துக்கொள்வார்..நன்மை செய்து ஆண்டவரின் நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள்.!!!