top of page

பள்ளத்தாக்கில்தான் நான் வளருவேன்

"பள்ளத்தாக்கில்தான் நான் வளருவேன்"

1. வருத்தம், வேதனை, உபத்திரவங்கள் நிறைந்து,
வாழ்க்கை சுமப்பதற்கு கடினமாய் தோன்றும்போது,
உடனடியாக நான் நினைவு கூர்ந்திட வேண்டும்,
உபத்திரவப் பள்ளத்தாக்கில்தான் நான் வளருவேன் என்று.

2. வாழ்க்கை முழுவதும் மலை உச்சியினில் தங்கினால்,
வலியின் அனுபவத்தைப் பெறாமலே முடங்கினால்,
பரமனின் அன்பை ஒருபோதும் உணர்ந்திட மாட்டேன்,
பிரயோஜனம் உள்ளவனாய் நான் வாழ்ந்திடவே மாட்டேன்.

3. நான் கற்றிட வேண்டியதோ மலையினும் பெரியது,
நாளும் எனது வளர்ச்சியோ மருவினும் சிறியது,
மலையுச்சியின் அனுபவங்களும் எனக்குத் தேவையே,
மறந்திட மாட்டேன்,
பள்ளத்தாக்கு தருமே வளர்ச்சியினை .

4. நடந்திட்ட நிகழ்வுகள் ஏனென்று, எதற்கென்று நினைத்துப் புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை,
ஆயினும் கர்த்தர் நடத்திச் செல்வாரென்று
அடியேன் கொண்ட நிச்சயத்திலோ மாற்றமில்லை.

5. சிலுவையின் நாயகனை உற்றுப் பார்க்கையிலே,
சிறியப் பள்ளத்தாக்குகள் உண்மையில் ஒன்றுமேயில்லை;
மரணத்தின் பள்ளத்தாக்கை அவர் கடந்துச் சென்றதினால்,
மரணத்தின் அதிபதியாம் சாத்தானுக்கு வெற்றியே இல்லை.

6. பள்ளத்தாக்கின் அனுபவத்தால் உள்ளம் உருகிப் போகையிலே,
புலம்பிடும் என்னையும் தயவாக மன்னித்து தேவனே,
பரிவாகச் சொல்லி உணர்ந்திட வைத்திடுமே,
"பள்ளத்தாக்கில்தான் நான் வளர்ந்திட முடியும்" என்று.!!!

bottom of page