top of page

ஆறுநாள் படைப்பு, வாரத்தில் 7 நாட்கள்

ஆதியாகமம் 1 - 2:4

ஆதியிலே, இந்த பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. தேவா ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

முதலாம் நாள்:

வெளிச்சம் உண்டாகக்கடவது என்று கூற, வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சத்தையும் இருளையும் பிரித்து, வெளிச்சத்தை 'பகல்' என்றும் இருளை 'இரவு' என்றும் பெயரிட்டார்.

இரண்டாம் நாள்:

ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாய விருவுக்கு மேலே ஜலமும், ஆகாய விரிவுக்கு கீழே ஜலத்தையும் பிரிட்டார். ஆகாய விரிவுக்கு 'வானம்' என்று பெயர் வைத்தார்.

மூன்றாம் நாள்:

வானத்தின் கீழ் இருந்த ஜலத்தை ஓரிடத்தில் சேர்த்தார், அப்போது வெட்டாந்தரை காணப்பட்டது. வெட்டாந்தரைக்கு 'பூமி' என்றும், சேர்ந்த ஜலத்திற்கு 'சமுத்திரம்' என்றும் பெயர் வைத்தார். அந்த வெட்டாந்தரையிலே புல்லையும், விடையையும், கனிமரங்களையும் படைத்தார்.

நான்காம் நாள்:

வானத்திலே சூரிய சந்திர நட்சத்திர சுடர்களை படைத்தார். அது காலங்களையும் நேரங்களையும் அறிந்ததற்காக படைத்தார்.

ஐந்தாம் நாள்:

ஆகாயத்தில் பறக்கும் பறவைகளையும், கடலில் நீந்தும் பெரிய மச்சங்களையும், சிறகில்லா பட்சிகளையும் படைத்தது அவைகளை ஆசீர்வதித்தார்.

ஆறாம் நாள்:

நாட்டு மிருகங்களையும், உறும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் படைத்தார்.

தேவசாயலாக மனிதை ஆணும் பெண்ணுமாக படைத்தார். அவர்களை ஆசீர்வதித்தார். உலகத்தில் அவர் படைத்தவர்களை ஆண்டு கொள்ளுங்கள் என்று கூறினார். மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் சைவ உணவை கொடுத்தார்.

ஏழாம் நாள்:

ஏழாம் நாள் என்று ஒன்றை ஏற்படுத்தினார். வாரத்தின் ஏழாம் நாளை பரிசுத்தப்படுத்தி அதை ஆசீர்வதித்தார். மனிதனோடு உறவாட தேவன் அந்த நாளில் ஓய்ந்து இருந்தார்.

bottom of page