top of page

சொற்களுக்குள் தான் மருத்துவம்

*"வெந்த + அயம் : வெந்தயம்
அயம் என்றால் இரும்பு . இரும்பு சத்து நமக்கு தேவை ஆனால் வெந்த இரும்பைதான் சாப்பிடமுடியும் அதான் பஸ்பம் செந்தூரம் அந்த சத்து முழுக்க வெந்தயத்தில் உள்ளது

"வெப்பம் + இல்லை : வேப்பிலை.! உடல் வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் வேப்பிலை.!"

"கரு + வெப்பம் + இல்லை : கருவேப்பிலை.! கருப்பை வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் கருவேப்பிலை.!"

"அகம் + தீ : அகத்தீ உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் அதுதான் அகத்தி.!"

"சீர் + அகம் : சீரகம் அகத்தின் சூட்டைச் சீராக்கும் அதுவே சீரகம்.!"

"காயமே இது பொய்யடா., (மலகுடல்) காயத்தின் காற்றை வெளியேற்றும் பெருங்காயம்.!"

"வெம்மை + காயம் : வெங்காயம் உடலின் வெம்மையைப் போக்கும் அதுவே வெங்காயம்.!"

"பொன் + ஆம் + காண் + நீ அதுதான் பொன்னாங்கண்ணி.! அதை நீ உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ.!"

"கரிசல் + ஆம் + காண் + நீ அதுதான் கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலை கரிசலாக்கும் காண்நீ.!"

இப்படிப்பட்ட சொற்களுக்குள் தான் மருத்துவத்தை வைத்தார்கள் நமது மகத்தான பாட்டன்மார்கள்.!

bottom of page