ஆதாம் ஏவாள் - ஆதி பெற்றோர் (ஆதி 2:7-25)
ஆறாம் நாளிலே, தேவன் மண்ணினால் மனிதனை உருவாக்கினார். ஆணும் பெண்ணுமாக அவர்களை படைத்தார்.
தேவம் மண்ணினால் மனித உருவை உருவாக்கினார். ஆனால் அந்த களிமண் உருவுக்கு உயிர் இல்லை. இந்த உருவம் எழும்பி நடமாட வேண்டுமென்றால், அதற்கு உயிர் வேண்டும். வசனம் 7-ன் படி தேவன் தன்னுடைய ஜீவ சுவாசத்தை நாசியில் ஊதினார், மனிதன் உயிர் உள்ளவனானான்.
மண் + தேவனுடைய சுவாசம் = உயிருள்ள மனிதன்/ ஆத்துமா
உயிருள்ள மனிதன் எப்படி மரிக்கிறான் ?
உயிருள்ள மனிதன் - தேவனுடைய சுவாசம் = மண்
அதினால் மண்ணுக்கே செல்கிறான்.
ஆதாம் ஏவாளை படைத்த தேவன், அவர்களுக்கு நல்ல பழங்கள், கொட்டைகள் போன்றவற்றை உணவாக கொடுத்தாரே தவிர, மாமிச உணவை அவர்களுக்கு உணவாக கொடுக்கவில்லை.
ஏதேன் என்னும் தோட்டத்தை உருவாக்கி, ஆதி பெற்றோர்களை அதனுள் வைத்தார். தோட்டத்தின் நடுவில் ஜீவ விருட்சத்தையும், நன்மை தீமை அறியும் மரத்தையும் வைத்தார். நன்மை தீமை அறியும் மரத்தில் உள்ள கனியை தவிர மற்ற எல்லா மரங்களின் கனியையும் சாப்பிடலாம் என்று கட்டளையிட்டார். நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை சாப்பிட்டால் சாவார்கள் என்று கூறினார்.
1. ஆதாமையும் ஏவாளையும் மண்ணினால் படைத்தது அவர்களுக்குள் உயிர் மூச்சை ஊதினார்
2. ஜீவா விருட்சத்தையும், நன்மை தீமை அறியும் விருட்சத்தையும் படைத்தார்
3. மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
4. நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை சாப்பிட்டால் சாவார்கள் என்று கூறினார்.
5. ஆதாமை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் பெயரிட கூறினார்