top of page

பாவம் எப்படி நுழைந்தது? (ஆதி 2, 3)

சகல விருட்சத்தின் கனிகளையும் புசிக்கலாம், ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கவேண்டாம் என்று தேவன் ஆதி பெற்றோராகிய ஆதாம் ஏவாளுக்கு கட்டளையிட்டார்.

ஏதேன் தோட்டத்தில் ஏவாள் உலாவருகிறபோது, சாத்தான் சர்ப்பத்தின் வடிவில் வந்து, "தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது". இந்த இடத்தில சாத்தான் ஏவாளுக்கு சந்தேகத்தை கிளப்பி விட்டுவிட்டான். ஏவாள், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கவும் தொடவும் வேண்டாம் என்றால். தேவன் புசிக்க வேண்டாம் என்றார், ஆனால் ஏவாள், "புசிக்கவும் தொடவும்" வேண்டாம் என்றாள். தேவன் சொல்லாததை சொன்னதாக சொன்னாள்.

சாத்தான், "நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்" என்றான்.

கனியை புசிக்கும் நாளில் சாவாய் என்று தேவன் கூறினார், கனியை பூசித்தால் "சாகவே சாவதில்லை, தேவர்களை போல ஆவீர்கள்" என்றான் சாத்தான்.

தேவனுக்கு செவிகொடுக்க வேண்டிய ஆதாமும் ஏவாளும், அந்த கனியை புசித்தார்கள்; அதன் மூலம் தேவனுடைய கட்டளையை மீறி பாவம் செய்தார்கள். தேவனுக்கு கீழ்ப்படியாததினால், தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்தில் இருந்து அனுப்பிவிட்டார். மனிதன் மரணத்தை சம்பாதித்தான்.

bottom of page