top of page

ஆதாம் ஏவாளுக்கு கொடுக்கப்பட்ட உடை எது? (ஆதி 3: 21)

ஆதாமுக்கு ஏவாளுக்கு தோல் உடைகளை உடுத்தினார் என்கிறது வேதம். தோல் உடை தேவன் உடுத்தினால், ஆதாமுக்கு ஏவாளுக்கும் இரண்டு உயிரினங்கள் கொல்லப்பட்டு தோல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த மிருகம் தேவன் படைத்த ஆடாக இருக்க வேண்டும்.

பழைய ஏற்பாடு தெளிவாக இவைகளை பற்றி கூறுகிறது. ஒருவன் பாவம் செய்யும் போது, அவன் மன்னிப்பு கேட்கப்பட பலி செலுத்தப்படவேண்டும். அந்த பலி ஆடாக இருக்க வேண்டும். ஒருவன் பாவம் செய்யும் பொது, அவன் தேவ கட்டளையை மீறுகிறான். நாம் செய்த பாவத்திற்கு சம்பளம், மரணம். நாம் மரிக்க வேண்டிய இடத்தில, ஆட்டுக்குட்டியை பலியிட தேவன் கூறியிருந்தார். அந்த ஆட்டுக்குட்டி, வரப்போகிற கிறிஸ்துவை குறிக்கிறதாய் இருந்தது. நம்முடைய மரணத்திற்காக கிறிஸ்து மரித்தார்.

வேதம் இயேசு கிறிஸ்துவை ஆட்டுகுட்டியோடு ஒப்பிடுகிறது. நாம் பாவம் செய்து தேவனிடம் மன்னிப்பு கோரும்போது, ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து, தன்னுடைய இரத்தத்தினால் நம்மை கழுவி, அவருடைய நீதியால் நம்மை மூடுகின்றார்.

ஆதாம் ஏவாளுலும் பாவம் செய்தவுடன் அவர்கள் மரிக்கவில்லை., தேவன் ஆட்டினை அவர்கள் செய்த பாவத்திற்கு பலியாக ஒப்புக்கொடுத்து, அதன் தோலால், ஆதாம் ஏவாளை மூடினார். ஆதாமின் இருந்து துவங்கிய அந்த பாலி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையும் வரை நீடித்தது.

bottom of page