நம்பவில்லை

பழத்தைத் தின்றால் மரணம் நேரிடும் என்ற போது மனிதன் நம்பவில்லை !!!!!!!!!

ஜலப்பிரளயம் வரப்போகிறது; பேழைக்குள் வந்து விடுங்கள் என்று நோவா கதறிய போது மனிதன் நம்பவில்லை !!!!!!

பட்டணம் அழியப்போகிறது; திரும்பிப் பார்க்காதே என்ற போது லோத்தின் மனைவி நம்பவில்லை !!!!!!!!!

தலைப்பிள்ளை சங்காரம் வருகிறது‍; என் ஜனங்களை விட்டுவிடு என்று மோசே கெஞ்சியபோது பார்வோன் நம்பவில்லை. !!!!!!!!!

கானானியர்களை வெல்ல நம்முடன் ஆண்டவர் இருக்கிறார் என்று காலேப் சொன்ன போது ஜனங்கள் நம்பவில்லை !!!!!!!!

மேசியா பிறந்துவிட்டார் என்றபோது ஜனங்கள் அதை நம்பவில்லை.!!!!!!!!!

அவர் மீண்டும் வருவார் என்ற போதும் ஜனங்கள் இன்னும் அவரை நம்பவில்லை !!!!!!!!!

ஆனால் அவரது வார்த்தைகளை அப்படியே நம்பும் ஒரு கூட்டம் உண்டு

அவர்கள் நம்பிக்கை நிச்சயம் தோற்கவில்லை; இனி தோற்பதும் இல்லை.

என் ஆண்டவர் நிச்சயம் மகிமையோடே திரும்பி வருவார் !!!!!!!!!

பூமியிலுள்ள யாவருடைய கண்களும் நிச்சயம் அவரைக்காணும்.

அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுங்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!