top of page

இயேசு என்பவா் இறைவன்


யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.


1. இயேசு தம்மால் பாவத்தை மன்னிக்க முடியும் என்று கூறினார் 


மாற்கு 2:10, லூக்கா7:48,49


2. அவர் தம்மைப்பற்றி இருக்கிறேன் என்றுகூறினார் .


யோவான் 8:58,25.


3. ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே அவர்இருந்தார் என்று கூறினார்


யோவான் 8:58


4. அவரை கண்டவன் பிதாவைக் கண்டிருக்கிறான்என்றும் அவர் அறிவித்தார்


யோவான் 14:8,9.


5. அவர் தாம் தேவனுடைய குமாரனாக இருக்கிறார் என்னும் ஒரு தெய்வீகப் பதவியின்மீது உரிமைபாராட்டினார்


யோவான் 5:17 ,18.


6. அவர் தொழுகையை ஏற்றுக்கொண்டார்


மத் 28:9,17. யோவா9:38. லூக்கா 24:52.


7. தோமா அவரை என் ஆண்டவரே என் தேவனே என்று அழைத்தான். 


யோவான் 20:28.


8. உலகத் தோற்றத்துக்கு முன்னே, பிதாவுடனிருந்த அவருடைய ஒன்றித்தத்தன்மையின் மீது அவர் உரிமை பாராட்டினார் 


யோவான் 17:5,24.


9. அவர் பேசுவதைக் கேட்டிருந்தவர்கள், அவரது நன்பர்களானாலும் விரோதிகளானாலும், இயேசு தமது தெய்வத் தன்மையின் மீது உரிமைபாராட்டிக் கொண்டிருந்தார் என்பதை அறிந்திருந்தனர். இதற்காக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும் என்று அவருடைய விரோதிகள் கோரிக்கை விடுத்தனர்


யோவான் 8:58 -50. யோவான்5:17 ,18.


10. அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்றுஎழுதும்படி யோவான் ஆவியினால் ஏவப்பட்டான். மிகவும் அழுத்தமான விதத்திலும், மிகவும் தெளிவான விதத்திலும், கிரேக்க மொழி இந்தக் கருத்தைஉணர்த்தக்கூடியதாக இருந்தது. 


யோவான் 1:1-3.


11. இயேசு எல்லாவற்றையும் சிருஷ்டித்தார்என்றும் எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னதால அவர் இருந்திருந்தார் என்றும் யோவான், பவுலார் ஆகிய இருவரும் கூறினார்கள். 


யோவான் 1:1-3. கொலோ 1:16.. எபி1:1-3.


12. தேவத்துவத்தின் பரபபூரணமெல்லாம்இயேசுவிடன் இருந்தது என்று பவுல் கூறினான்.


கொலோ 2:9


13. வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்று ஏசாயா, தீர்க்கதரிசனத்தில் இயேசுவை அழைக்கிறான்,


ஏசாயா 9:6


14. மற்றப் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளும் அவரை யேகோவா என்றே அழைக்கின்றனர் . 


ஓசியா 12:4,5


இந்த காரியங்கள் அனைத்தும் புதியஏற்பாட்டிலும் பழைய ஏற்பாட்டிலும் உள்ள தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் இயேசு  தெய்வம் என்று  குறிப்பிடும் உண்மையை சுட்டிக்காட்டுகின்றன:


இயேசு யார்???


1. சர்வத்துக்கும் மேலான தேவன். ரோமர் 9:5


2. . சகலத்தையும் படைத்ததேவன் . யோவான் 1:1-3. கொலோ1:16. 3. வல்லமையுள்ள தேவன். ஏசா9:6


4. மகாதேவனும் நமதுஇரட்சகரும். தீத்து2:13


5. மெய்யான தேவனும்நித்திய ஜீவனுமாயிருக்கிறார். 1 யோவா5:20.


6. நமது ஆண்டவரும் தேவனுமாயிருக்கிறார். யோவா 20:28. எபி 1:2,10


7. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர், அல்பா-ஓமெகா, ஆதியும் அந்தமும்,முந்தினவரும் பிந்தினவருமானவர், இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவர். வெளி 17:14; 1:8,17,18; 19:16; 1தீமோத் 6:15,16


8. மாம்சத்தில் வெளிப்பட்டதேவன். 1தீமோ 3:16.


bottom of page