இயேசு கிறிஸ்து இரகசியமாக வரப்போகிறாரா?
மத்தேயு 24: 43. - "திருடன் எப்போது வருவான் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்"
இயேசு கிறிஸ்து, "திருடனை போல வேறுவேன் என்றால் அர்த்தம் என்ன?". இயேசு கிறிஸ்து திருடனை போல வருகிறேன் என்பதற்கு அவரே விளக்கத்தை கீழே உள்ள வசனத்தில் கொடுக்கிறார்...
மத்தேயு 24: 44. - "நினையாத நேரத்தில் வருவேன் என்பதே அர்த்தம்"
"நினையாத நேரம்" என்பது தான் அதன் பொருள்... திருடன் நம்மிடம் சொல்லிக்கொண்டா நம் வீட்டில் திருட வரமாட்டான். அதை போல இயேசு கிறிஸ்து நாம் நினையாத நேரத்தில் வருவதால், நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்க சொல்கிறாரே தவிர, இரகசியமாக வருவேன் என்பது பொருள் அல்ல, சொல்லவும் இல்லை.
இயேசு கிறிஸ்துவின் வருகை நேரடியானது/ ஒளிவு(அ) மறைவு இல்லாதது (Literal)
அப்போஸ்தலர் 1:11 - "எப்படி சென்றாரோ அப்படியே வருவார் என்றனர் தூதர்கள்"
தேவதூதர்கள் அவர்களிடம், "எப்படி போனாரோ, அப்படியே திரும்பி வருவார்" என்றார்கள்... அப்படியானால், இயேசு கிறிஸ்து ரகசியமாக வரப்போவதில்லை, வெளிப்படையாகவே வருவார்.
இயேசு கிறிஸ்துவின் வருகை காணக்கூடியது (Visible)
வெளி:1:7 -"கண்கள் யாவும் அவரை காண மேகங்களுடனே வருகிறார்"
மத்தேயு:24:30 -"மனுஷ குமாரன் வல்லையோடும் மகிமையோடும் வருவார்"
அவரது வருகை பகிரங்கமாக, எல்லாரும் பார்க்கும்படி இருக்கும் என்று தான் இயேசு கிறிஸ்து சொன்னார். அப்படியானால், இயேசு கிறிஸ்து ரகசியமாக வரப்போவதில்லை, வெளிப்படையாகவே வருவார்.
இயேசு கிறிஸ்துவின் வருகை கேட்கக்கூடிதானது (Audiable)
மத்தேயு:24:31 "வலுவாய் தொனிக்கும் சத்தத்தோடு வருவார், அவருக்குரியவர்களை கூட்டி சேர்ப்பார்கள் தூதர்கள்"
I தெசலோனிக்கேயர்:4:16 "இயேசு கிறிஸ்து ஆரவாரத்தோடு பிரதான தூதரின் சத்தத்தோடு, எக்காள சத்தத்தோடு வருவார். மறுத்தவர்கள் கூட அவர் சத்தத்தை கேட்டு எழுந்திருப்பார்கள்"
II பேதுரு:3:10 "இயேசு கிறிஸ்து வரும்போது வானங்கள் அகன்று போகிறது, பூமி உருகிப்போகிறது, எல்லாம் அழிந்து போகிறது"
அவர் வருகையில், எக்காளங்கள் தொனிக்கும், பயங்கர சத்தமாக இருக்கும், வானம் அகன்று போகும், பூமி வெந்து உருகி போகும் என்று தான் வசனம் சொல்கிறது. இப்படி இப்படி வருவது வெளிப்படையான வருகை. அப்படியானால், இயேசு கிறிஸ்து ரகசியமாக வரப்போவதில்லை, வெளிப்படையாகவே வருவார்.
இயேசு கிறிஸ்துவின் வருகை அற்புதமாது (அ) அருமையானது (Glorious):
சங்கீதம்:50:3 "அவர் அக்கினியோடும் மகா புயலோடும் வருவார் "
சங்கீதம்:50:4 "இயேசு கிறிஸ்து நியாயம் தீர்க்க வானத்தையும் பூமியையும் கூப்பிடுவார்"
சங்கீதம்:50:5 "இயேசு கிறிஸ்து, பரிசுத்தவான்களை தம்மிடம் கூடி சேர்க்க சொல்லுவார்"
இயேசு கிறிஸ்துவின் வருகை (Climatic):
மத்தேயு:24:27 "இயேசு கிறிஸ்து, மின்னல் கிழக்கில் இருந்து வருகிறதை போல வருவார்"
வேத வசனங்கள், இயேசு கிறிஸ்து ரகசியமாக வருவதாக சொல்லவில்லை.
இறுதிச் சுருக்கம் (Conclusion):
இறுதியாக "வெளி 22: 12. "இயேசு கிறிஸ்து, இந்த பூமியில் உள்ள ஒவ்வொருவரின் கிரியைக்கு தக்க பலன் கொடுக்க வருவார்"
தேவனுடைய இரண்டாம் வருகை அவனவனுக்கு கொடுக்கும் பலனோடு தான் தேவன் வருவார் என்று வேதம் சொல்கிறது.
பலனை கொடுப்பதில் ரகசியம் இல்லை.
யோவான்3: 19-21