தானியேல் - 2
நேபுகாத்நேச்சார் ராஜா, தானியேலையும் அவன் நண்பர்களையும் அடிமையாக பாபிலோனில் வைத்திருக்கிறார். அந்நேரத்தில் ராஜா ஒரு கனவு காண்கிறார். அந்த கனவை ராஜா புரிந்து கொள்ளாததினால், சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் தாண்டி தானியேல் அந்த கனவை விளக்கி கூறுகிறார். இது ராஜாவுக்கான கனவு மாத்திரம் அல்ல; நாம் வாழும் இந்த இறுதி காலத்திற்கான தீர்க்கதரிசனம்.
நேபுகாத்நேச்சார் ராஜா கண்ட கனவு (தானியேல் 2: 31 – 36)
ராஜா ஒரு பெரிய சிலையை காண்கிறார். அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது. அதை பார்த்துக்கொண்டிருக்கும் போது கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது. அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
கனவின் /தரிசனத்தின் விளக்கம் (தானியேல் 2: 37 – 45)
பாபிலோன் ராஜாவாகிய அந்த நேபுகாத்நேச்சார் ராஜா பொன்னான தலை. இது பாபிலோன் ராஜ்யத்தை குறிக்கிறது. இந்த ராஜ்ஜியம், வசனம் 32 ல் சொல்லப்பட்ட பசும்பொன் தலையை குறிக்கிறது.
முதல் ராஜ்யத்திற்கு பிறகு, கீழ்த்தரமான இரண்டாம் ராஜ்ஜியம் தோன்றும். இந்த ராஜ்ஜியம், வசனம் 32ல் சொல்லப்பட்ட வெளியாகிய மார்பும் அதின் புயங்களும் குறிக்கிறது.
உலகமெல்லாம் ஆளும் மூன்றாம் ராஜ்யமாகிய வெண்கலமான ராஜ்ஜியம் தோன்றும். வசனம் 32ல் சொல்லப்பட்ட வெண்கலமாகிய வயிறும் அதின் தொடைகளும் குறிக்கிறது.
நான்காம் ராஜ்ஜியம் இரும்பை போல உரமுள்ளதாய் இருக்கும். வசனம் 33ல் சொல்லப்பட்ட இரும்பு கால்களை குறிக்கிறது.
பாதங்கள் இரும்பும் களிமண்ணும் கலந்து இருந்தது. வசனம் 41ல் சொல்லப்பட்டதை போல, அந்த நான்காம் ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட ராஜ்ஜியம் சம்பந்தம் கலந்தாலும் (வசனம் 43) ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
இந்த நாட்களிலே, (வசனம் 44) கையால் பெயர்க்கப்படாத கல் எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி நின்மூலமாக்கி அந்த கல் என்றன்றைக்கும் நின்றது.
சரித்திரத்தில் எப்போது இவைகள் நிறைவேறியது/நிறைவேறப்போகிறது?
வசனம் 32, 38:- முதல் ராஜ்ஜியம் : தங்கத்தலை/ பாபிலோன் (கி.மு. 605 - கி.மு .539)
வசனம் 32, 39:- இரண்டாம் ராஜ்ஜியம்: வெள்ளி மார்பும் புயமும்/ மேதிய - பெர்சியா (கி.மு. 539 - கி.மு.331)
வசனம் 32, 39:- மூன்றாம் ராஜ்ஜியம்: வெண்கல வயிறும் தொடையும்/ கிரேக்கம் (கி.மு. 331 - கி.மு.168)
வசனம் 33, 40:- நான்காம் ராஜ்ஜியம்: இரும்பு கால்கள் / ரோம ராஜ்ஜியம் (கி.மு. 168 - கி.பி.476)
வசனம் 33, 41:- 10 விரல்கள்(ராஜ்யங்கள்): பிரிந்த ஐரோப்பா (Divided Europe) 10 ராஜ்யங்கள். (கி.பி.476 - இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை)
பிரிந்த 10 ஐரோப்பிய ராஜ்ஜியங்கள்: ஃபிராங்க்ஸ் (1), ஹன்ஸ் (2), விசிகோத்ஸ் (3), ஆஸ்ட்ரோகோத்ஸ் (4), ஹெருலி (5), லோம்பார்ட்ஸ் (6), ஆங்கிலோ-சாக்சன்ஸ் (7), சூவி (8), வாண்டல்ஸ் (9) மற்றும் பர்கண்டியன்ஸ் (10)
வசனம் 34, 35, 44:- கல் – பர்வதம். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை.
தானியேல் - 7
தானியேல் 2ம் அதிகாரத்தில் தேவன் ஒரு சிலை வடிவில் என்னென்ன ராஜ்ஜியங்கள் வரும் என்று தெளிவாக கூறினார். ஆனால், தானியேல் 7ம் அதிகாரத்தில் யார் அந்த ராஜ்ஜியங்கள் என்பதை மேலும் தெளிவாக கூறுகிறார்.
தானியேலின் தீர்க்கதரிசனம் (தானியேல் 7: 1-14)
வெவேறு உருவமுள்ள நாலு மிருகங்கள் சமுத்திரத்தில் இருந்து எழும்பினது.
(வசனம் 4) முதல் மிருகம் சிங்கத்தை போல இருந்தது, கழுகின் சேட்டைகள் உண்டாயிருந்தது. ஆனாலும் அதன் இறகுகள் பிடுங்கப்பட்டது.
(வசனம் 5) இரண்டாம் மிருகம், கரடிக்கு ஒப்பாக இருந்தது. அது ஒருபக்கம் சாய்ந்து நின்று மூன்று விலா எலும்புகளை கவ்விக்கொண்டிருந்தது.
(வசனம் 6) மூன்றாம் மிருகம் சிவிங்கியைப்போல இருந்தது. அதற்க்கு நான்கு சேட்டைகள் இருந்தது, நான்கு தலைகளும் இருந்தது.
(வசனம் 7) நான்காம் மிருகம் கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது. அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது. அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது
(வசனம் 8) அந்த 10 கொம்புகளின் இடையில் இருந்து வேறொரு சின்ன கொம்பு எழும்பினது.
(வசனம் 8, 11) அந்த சின்ன கொம்பு எழும்பும்போது போது, 10 கொம்புகளில் உள்ள மூன்று கொம்புகள் பிடுங்கப்பட்டது. அந்த சின்ன கொம்பில் மனிதக் கண்களுக்கு ஒப்பான கண்கள் இருந்தது, பெருமையான வாய் இருந்தது. பெருமையாய் பேசியதால் அந்த மிருகம் கொலை செய்யப்பட்டது.
(வசனம் 9,10) பரலோகத்தில் சிங்காசனம் நியாயத்தீர்ப்புக்காக வைக்கப்பட்டது. நீண்ட ஆயுசுள்ள பிதாவாகிய தேவன் அதில் வீற்றிருந்தார். நியாயத்தீர்ப்புக்காக நியாய சங்கம் உட்கார்ந்து, புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.
(வசனம் 13) நியாயத்தீர்ப்பின் முடிவோடு, இயேசு கிறிஸ்து வந்தார்.
தீர்க்கதரிசனத்தை விளக்கம் (தானியேல் 7: 16-28)
(வசனம் 4, 17) சமுத்திரத்தில் இருந்து – சிங்கம் (முதல் மிருகம்/ராஜ்ஜியம்)
(வசனம் 5, 17) சமுத்திரத்தில் இருந்து – கரடி (இரண்டாம் மிருகம்/ராஜ்ஜியம்)
(வசனம் 6, 17) சமுத்திரத்தில் இருந்து – சிவிங்கி ( நாலு தலை) (மூன்றாம் மிருகம்)
(வசனம் 7, 17) சமுத்திரத்தில் இருந்து – கெடியும் பயங்கரமுமான மிருகம் [பெரிய இருப்புப்பற்கள்] (நான்காம் மிருகம்)
(வசனம் 20, 24) 10 விரல்கள்(10 ராஜ்யங்கள்)
(வசனம் 8, 11, 24-25) வேறொரு சின்ன கொம்பு
(வசனம் 9-10, 22, 26) பரலோகத்தில் நியாத்தீர்ப்பு காட்சி
(வசனம் 13-14, 27) இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும், தேவனுடைய ராஜ்ஜியம்
அடையாளங்கள்
மிருகம் - ராஜ்ஜியங்கள்/ராஜா (தானியேல் 7:17, 23)
கொம்பு - ராஜாக்கள் (தானியேல் 7: 24)
சமுத்திரம் - ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரரும் (வெளி 17:15)
(வசனம் 25) ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் - எண்ணாகமம் 14:34; எசேக்கியேல் 4:5,6
ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் - என்பது என்ன?
தீர்க்கதரிசனத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடம். ஒரு காலம் என்பது 1 வருடம். காலங்கள் என்பது (1+1) 2 வருடங்கள், அரைக்கலாம் என்பது 6 மாதங்கள். வேத முறைப்படி, ஒரு வருடத்திற்கு 360 நாட்கள். ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் என்பது 360 + 360 + 360 + 180 = 1260 நாட்கள். ஒரு நாள் = ஒரு வருடம். 1260 நாட்கள் என்பது 1260 வருடங்கள்.
இவைகளை பற்றி மேலும் தெளிவாக படிக்க இந்த link click செய்யவும்.
சரித்திரத்தில் இவைகள் எப்போது நிறைவேறியது/நிறைவேறப்போகிறது?
மிருகம் என்பது ராஜ்யத்தை குறிக்கிறது. அநேக நாடுகள், தங்களுக்கு தேசிய விலங்கு என்று ஒன்று வைத்திருப்பார்கள். அந்த விலகின் வல்லமையை போல அந்த நாடு இருக்கிறது என்ற அர்த்தத்தில் அந்த விலங்கு குறிக்கப்பட்டிருக்கிறது. மிருகம் என்பது ராஜ்யத்தை குறிக்கும் ஒரு அருமையான அடையாளம்.
வசனம் 4, 17 - சமுத்திரத்தில் இருந்து – சிங்கம் (முதல் ராஜ்ஜியம் / பாபிலோன்) (கி.மு. 605 - கி.மு .539)
முதல் ராஜ்ஜியம் பாபிலோன் ராஜ்யத்தை குறிக்கிறது. யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான். அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; (தானி 1:1, 2). எருசலேமை பாபிலோன் ராஜா கையில் ஒப்பு கொடுப்பேன் என்று தேவன் ஏற்கனவே எரேமியா தீர்க்கதரிசி என்மூலம் சொல்லி இருந்தார். "யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான். (எரேமி 20:4)". எழுபது வருடம் பாபிலோனில் அடிமைகளாய் இருப்பார்கள் என்று தேவன் கூறினார் (எரேமி 29: 10). இந்த பாபிலோனின் ஆட்சி கி.மு. 605 இல் தொடங்கி கி.மு.539 ல் முடிந்தது.
வசனம் 5, 17 - சமுத்திரத்தில் இருந்து – கரடி (இரண்டாம் ராஜ்ஜியம்/ மேதிய - பெர்சியா (கி.மு. 539 - கி.மு.331))
கரடி, பாபிலோனுக்கு பிறகு வந்த மேதிய -பெர்சிய அரசாங்கத்தை குறிக்கிறது. இதனை வரலாற்றிலும் காணலாம். "மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது" மூன்று ராஜ்யங்களை வீழ்த்தி அதனை அரசாண்டது. அந்த மூன்று ராஜ்ஜியங்கள் யாதெனில், 1. லிடியா (பழங்கால துருக்கி), 2. பாபிலோன், 3. எகிப்து.
லிடியா ராஜ்யத்தை கி.மு 547 யிலும், பாபிலோனை கி.மு. 539 யிலும், எகிப்தை கி.மு 525 லும் கைப்பற்றி அரசாண்டது இந்த மேதிய -பெர்சிய ராஜ்ஜியம்.
தானியேல் 8:20 ல் மேதிய-பெர்சிய ராஜாக்கள் என்று தேவன் கூறினார்.
வசனம் 6, 17 - சமுத்திரத்தில் இருந்து – சிவிங்கி (மூன்றாம் மிருகம்/ நாலு தலை) - கிரேக்கம் (கி.மு. 331 - கி.மு.168)
சிவிங்கி, கிரேக்க அரசாங்கத்தை குறிக்கிறது. வேகமாக ஓடும் மிருகம் இந்த சிவிங்கி. வசனம் சொல்கிறது, இந்த சிவிங்கிக்கு சிறகுகள் கொடுக்கப்பட்டது என்று. வேகமாக ஓடும் சிவிங்கிக்கு சிறகுகள் இருந்தால், பலமடங்கு வேகமாக செல்லும் என்பதை குறிக்கிறது. அதனை போல, குறுகிய காலத்தில், மோதிய-பெர்சிய அரசாங்கத்தை, கிரேக்க ராஜ்ஜியம் வீழ்த்தியது. கிரேக்க ராஜ்யத்தின் தலைவர், மகா அலெக்சாண்டர். மூன்றே வருடத்தில் எகிப்து முதல் சிந்து நதி எல்லை வரை கைப்பற்றினார்.
எவ்வளவு துல்லியமாக தேவன் இவைகள் வரும் என்று சொல்லியிருந்தார். பெயரோடு தானியேல் 8:21ல் கிரேக்க ராஜா என்று தேவன் கூறினார்.
மேலும், சிவிங்கிக்கு 4 தலைகள் இருந்தது என்கிறது வேதம். மகா அலெஸ்சாந்தர் இறந்த பிறகு, அவரின் 4 தளபதிகள் கிரேக்க ராஜ்யத்தை ஆண்டனர். கிரேக்க ஆட்சி கி.மு. 168ல் முடிவுக்கு வந்தது.
வசனம் 7, 17 - சமுத்திரத்தில் இருந்து – கெடியும் பயங்கரமுமான மிருகம் [பெரிய இருப்புப்பற்கள்] (நான்காம் மிருகம்/ ரோம ராஜ்ஜியம் (கி.மு. 168 - கி.பி.476) ; வசனம் 20, 24 - 10 விரல்கள்(10 ராஜ்யங்கள் / பிரிந்த 10 ஐரோப்பா ராஜ்யங்கள்)
ஆங்கிலத்தில், சில புத்தகங்களில் இருந்து உள்ள பதிவு...
The dragon beast represents the Roman Empire (168 B. C. - 476 A. D.). This empire came to be known as the Airon monarchy of Rome (Edward Gibbon, The History of the Decline and Fall of the Roman Empire, vol. 4, p. 161).
The ten horns represent the ten kingdoms into which the Roman Empire was divided when it fell apart. These ten kingdoms, according to Edward Gibbon, were: The Alemanni, the Franks, the Burgundians, the Vandals, the Suevi, the Visigoths, the Saxons, the Ostrogoths, the Lombards and the Heruli (see, M. H. Brown, The Sure Word of Prophecy, pp. 54, 55).
The historian Machiavel, without the slightest reference to this prophecy, gives the following list of the nations which occupied the territory of the Western Empire at the time of the fall of Romulus Augustulus [476 A. D], the last emperor of Rome: The Lombards, the Franks, the Burgundians, the Ostrogoths, the Visigoths, the
Vandals, the Heruli, the Sueves, the Huns, and the Saxons: ten in all. (H. Grattan Guinness, The Divine Program of the World=s History, p. 318)
ரோம ராஜ்ஜியம் கி.மு.168 முதல் கி.பி 476 வரை அரசாண்டது. ரோமா பேரரசின் கடைசி மன்னன் ரோமுலஸ் ஆகஸ்டுல்ஸ் (Romulus Augustulus). வடக்கில் இருந்து பார்பேரியன் பழங்குடியினர் ஒரு பழிவாங்கலுடன் ரோம பேரரசின் மீது இறங்கி தோற்கடித்து, பின்பு அது 10 நாடுகளாக (மேற்கு ஐரோப்பா) உடைந்தது.
பிரிந்த 10 ஐரோப்பிய ராஜ்ஜியங்கள்: ஃபிராங்க்ஸ் (1), ஹன்ஸ் (2), விசிகோத்ஸ் (3), ஆஸ்ட்ரோகோத்ஸ் (4), ஹெருலி (5), லோம்பார்ட்ஸ் (6), ஆங்கிலோ-சாக்சன்ஸ் (7), சூவி (8), வாண்டல்ஸ் (9) மற்றும் பர்கண்டியன்ஸ் (10)
(வசனம் 8, 11, 24-25) வேறொரு சின்ன கொம்பு
இப்போது சின்ன கொம்பு யார் என்று கவனித்து பார்க்க வேண்டும். சின்ன கொம்பு யார் என்று கண்டறிய சின்ன கொம்பின் 11 தன்மைமைகளை பார்ப்போம்.
சின்ன கொம்பு யார்? - 11 அடையாள குறிப்புகள்
1. தானி 7:8 - நான்காம் மிருகம் ரோம். தானியேல் 2ன் படி ரோமுக்கு இரும்பு தன்மை இருப்பது அடையாளப்படுத்துகிறது. அப்படியிருக்க, ரோமின் தலையில் இருந்து முளைத்த சின்ன கொம்பிற்கு இரும்பின் தன்மைகள் இருக்கும். கொம்பு அரசாங்கத்தை குறிக்கிறது.
2. தானி 7:8 - 10 கொம்புகளுக்கு (ராஜ்ஜியங்களுக்கு) மத்தியில் தோன்ற வேண்டும்
3. தானி 7:8 - 10 கொம்புகளில் (ராஜ்யங்களில்) 3 ராஜ்யங்களை பிடுங்கிப்போட்டது. அதாவது, இந்த சின்ன கொம்பு 3 ராஜ்யங்களை அழித்தது.
4. தானி 7:24 - சின்னக்கொம்பு, முந்தின ராஜ்யங்களை விட வேறாய் இருந்தது.
5. தானி 7:21, 25 - உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளை பேசினான். உன்னதமானவர் என்பது தேவாதி தேவனை, வானத்தையும் பூமியையும் படைத்தவரை குறிக்கும். அவருக்கு "விரோதமாக" பேசினான். "பேசினான்" என்பதால் அது மனிதனை குறிக்கின்றது; அதாவது இந்த சின்ன கொம்பின் ஒரு மனிதன். மற்ற ராஜ்யங்களுக்கு இது குறிப்பிடப்படவில்லை.
6. தானி 7: 25 - பரிசுத்தவான்களை ஒடுக்கினான். அதாவது, தேவனுடைய பிள்ளைகளை துன்பப்படுத்தினான்.
7. தானி 7: 25 - "ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும்" - தேவனுடைய பிள்ளைகளை துன்பப்படுத்தினான். ஒரு காலம் என்பது ஒரு வருடம், காலங்கள், இரண்டு வருடம், அரை காலம், அதாவது ஒரு காலத்தில் பாதி, அரை வருடம். மொத்தம் தீர்க்க தரிசன மூன்றரை வருடங்கள் துன்பப்படுத்தினான். அதாவது மூன்றரை வருடங்கள் என்பது 1260 நாட்கள் (1 வருடம் - 360 நாட்கள்), அதாவது 1260 வருடங்கள் தேவனுடைய பிள்ளைகளை துன்பப்படுத்தினான்.
8. தானி 7: 25 - "காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்" - வேதத்தில் காலங்கள் என்பது தேவன் சொல்லும் காலங்கள்; பிரமாணங்கள் என்பது தேவன் சொன்ன பிரமாணங்கள், அதாவது தேவனுடைய நியாயப்பிரமானங்கள், கட்டளைகள்.
வேதத்தில் தேவன் கொடுத்த காலங்கள் எது?
ஒரு நாள் என்பது - மாலை முதல் மாலை வரை
ஒரு மாதம் எம்பது - 30 நாட்கள்
ஒரு வருடம் - 360 நாட்கள்
வேதத்தில் தேவன் கொடுத்த பிரமாணங்கள்?
10 கட்டளைகள்.
உதாரணமாக - 4ம் கட்டளை ஓய்வு நாளில் பரிசுத்தமாய் ஆசாரிப்பாயாக என்பதாகும். ஓய்வு நாள் என்பது வாரத்தின் ஏழாம் நாள் அதாவது இன்றைய சனிக்கிழமை வாரத்தின் ஏழாம் நாள்.
தற்போது, ஒரு நாள் எப்போது தொடங்கி எப்போது முடிகிறது?
ஒரு மாதம் எத்தனை நாட்கள்? ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள்?
ஏன் வாரத்தில் ஏழாம் நாளாகிய சனிக்கிழமை (அதாவது மாலை முதல் மாலை வரை ஒரு நாள், அதாவது வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிகிழமை மாலை வரை ஒரு நாள்) தேவனை ஆராதிக்காததின் காரணம் என்ன?
சிந்திக்க....
9. தானி 7:24, 25 - சின்ன கொம்பு முந்தினவர்களை பார்க்கிலும் வேறாய் இருந்தான், உன்னதமானவருக்கு விரோதமாக பேசினான், காலங்களை நேரங்களை மாற்றா நினைப்பான், ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் பரிசுத்த வாங்கலை துன்பப்படுத்தினான்.
வேறாய் இருந்தான் - முந்தினவர்கள் அரசர்களாக ராஜ்யத்தை அரசாண்டார்கள். சின்ன கொம்பு வேறாய் இருந்தான், அதாவது வித்தியாசம். சின்ன கொம்பு அரசனாக அல்ல, ஆனால் ராஜ்யத்தை ஆண்டான்.
உன்னதமானவருக்கு - பரிசுத்த தேவனுக்கு விரோதமாக பேசினான். என்ன பேசினான்? வெளி 13: 5 "பெருமையானவைகளையும் தூஷணங்களையும்" பேசினான். எது தூஷணம்?
மத்தேயு 9:1-3; மாற்கு 2:7; லூக்கா 5:21 இயேசு கிறிஸ்து பாவங்களை மன்னிக்கிறார் - அவர்களை தேவதூஷணம் சொல்கிறார் என்றார்கள்.
மத்தேயு 26: 63-65; மாற்கு 14: 62-64; யோவான் 10:33 - இயேசு கிறிஸ்து தன்னை தேவன் என்று சொல்கிறார்.
ஒரு மனிதன் தானை தேவன் என்று சொல்வதும், தன்னால் பாவங்களை மன்னிக்க முடியும் என்று சொல்வதும் தேவதூஷணம்
தேவன் ()இயேசு கிறிஸ்து) மாத்திரமே பாவங்களை மன்னிக்க அதிகாரமுடையவர். தன்னால் தன்னை பாவங்கள் மன்னிக்க முடியும், தன்னை தேவன் என்று உயர்த்துபவன் தேவ தூஷணம் சொல்பவன். இன்று, தன்னால் பாவங்களை மன்னிக்க முடியும் என்று சொல்பவர்கள் யார்? தன்னை தேவனுடைய ஸ்தானத்தில் உயர்த்துபவன் யார்?
10. தானி 7:8 - "மனுஷகண்களுக்கு ஒப்பான கண்களும்" இருந்தது. இந்த அரசாங்கத்தை தலைவனாக இருந்து நடத்துபவன் ஒரு மனிதன் என்று வேதம் சொல்கிறது.
11. தானி 7:8 - சின்ன கொம்பு - சிறிய ராஜ்ஜியம். ஒரு மனிதன் தலைவனாக இருந்து அந்த சிறு ராஜ்யத்தை வழிநடத்துகிறான்.
கேள்விகள்:
இந்த எல்லா கேள்விகளும் யாருக்கு பொருந்துமோ அந்த நபரே சின்ன கொம்பு.
1. இந்த உலகத்தில் எல்லா நாடுகளிலும் சேர்ந்தே ஆட்சி செய்கின்றனர். எந்த நாடு ஒரே ஒரு நபர் தலைமையில் ஆட்சி நடை பெறுகிறது?
2. இந்த நபர் உன்னதமானவருக்கு விரோதமாக பேசுவதால், வேதத்தின் தேவனுக்கு விரோதமாக பேசுகிறான். வேதத்தின் மைய நாயகர் இயேசு கிறிஸ்து. அப்படியானால், இந்த சின்ன கொம்பு, கிறிஸ்துவின் பெயரில் வருகிறான்.
3. பாவங்களை மன்னிக்க தன்னால் தான் முடியும் என்று யார் சொல்கிறார்கள்?
4. கி.பி. 476 தொடங்கி 1260 வருடங்கள் ஆட்சி செய்தான். இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஆட்சி செய்த நாடு எது?
5. எந்த அரசாங்கத்தில் உள்ளவர் தன்னை தெய்வமாக உயர்த்துகிறார்?
6. தேவன் கொடுத்த காலங்களையும் பிரமாணங்களையும் மாற்றியது யார்?
7. இந்த நபர் ரோம ஆட்சியின் தலையில் இருந்து தோன்றியதால் இரும்பின் தன்மைகள் இருக்கும். அந்த ரோம பாரம்பரியத்தில் வந்த அந்த ரோம நபர் யார்?
8. ரோம அரசில் இருந்து தோன்றி, தன்னை தேவனுடைய ஸ்தானத்தில் உயர்த்தி, தன்னால் பாவங்களை மன்னிக்க முடியும் என்று சொல்லி, தேவனுடைய பிரமாணங்களை மாற்றி, ஒரே ஒரு நபர் அதற்க்கு தலைமை வகித்து இருக்கும் அந்த சிறிய நாடு எது?
வெளி - 13
வெளிப்படுத்தின விசேஷம், வேதத்தின் கடைசி புத்தகம். இது ஒரு தீர்க்கதரிசன புத்தகம், இறுதி காலத்தில் என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்று வெளிச்சம் காட்டும் புத்தகம். தானியேல் 7ம் அதிகாரத்தின் விளக்கமே இந்த வெளிப்படுத்தின விசேஷம்.
முதல் மிருகம்
வசனம் 13: 1-2 - சமுத்திரத்தில் இருந்து ஒரு மிருகம் ஒரு மிருகம் எழும்பி வந்தது. அதற்க்கு 7 தலைகள் , 10 கொம்புகளும் இருந்தது. மிருகம் சிறுத்தையை போலவும், கால் கரடி போலவும், வாய் சிங்கத்தை போலவும் இருந்தன.
சமுத்திரம் - ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரரும் (வெளி 17:15)
கொம்புகள் - அரசாங்கங்கள்
வாய் - சிங்கம் - தானியேல் 7ம் அதிகாரத்தின் முதல் மிருகம் சிங்கம். சிங்கம் பாபிலோனை குறிக்கிறது. சிங்கத்தை போல பேசியதென்றால், பாபிலோனிய கொள்கைகளை மக்களிடம் பேசியது.
கால்கள் - கரடி - தானியேல் 7ம் அதிகாரத்தின் இரண்டாம் மிருகம் கரடி. கரடி மேதிய-பெர்சிய ராஜ்ஜியம். அந்த ராஜ்யத்தின் தன்மைகள் இந்த மிருகத்திற்கு இருந்தது.
மிருகம் - சிறுத்தை - தானியேல் 7ம் அதிகாரத்தின் மூன்றாம் மிருகம் சிவிங்கி (அ) சிறுத்தை. கிரேக்க ராஜ்யத்தை குறிக்கிறது. கேற்க தத்துவங்கள் (அரிஸ்டாட்டில், பிளாட்டோ ) இந்த மிருகத்திற்கு இருந்தது. மக்கள் மத்தியில் இருந்து எழும்பியதால் மக்களுக்கு இந்த கொள்கைகளை போதித்தது.
7 தலைகள் - பாபிலோன் (1 தலை), மேதிய-பெர்சிய (1 தலை), கிரேக்கம் (1 தலை), கிரேக்கத்தில் உள்ள 4 தளபதிகள் (4 தலைகள்)
10 கொம்புகள் - 10 ராஜ்ஜியங்கள்
சமுத்திரத்தில் இருந்து வந்தது - மக்கள் அதிகமான இடத்தில இருந்து வந்தது. தானியேல் 7ம் அதிகாரத்தில் சிங்கம், கரடி, சிறுத்தை தனித்தனியே வந்தது. ஆனால் இங்கு வந்த மிருகம் எல்லா மிருகமும் கலந்த கலவையாக வருகிறது. நான்காம் மிருகத்தை பற்றி சொல்லவில்லை, ஏனென்றால், சமுத்திரத்தில் இருந்து வந்த மிருகம் நான்காம் மிருகத்தின் இரும்பு தன்மையோடு வருகிறது. கி.பி. 457ல் ரோம் அழிக்கப்பட்டு சின்ன கொம்பு அந்த பதவியை எடுத்து கொண்டது. இந்த சின்னகொம்பின் ஆட்சி இயேசு கிறிஸ்து இரண்டாம் வருகை வரையில் இருக்கும். அப்படியானால், இந்த சமுத்திரத்தில் இருந்து வந்த மிருகம் "சின்ன கொம்பை" குறிக்கிறது.
வசனம் 13: 2 -வலுசர்ப்பம் அதிகாரத்தையும், சிங்காசனத்தையும் கொடுத்தது
வலுசர்ப்பம் - சாத்தான்
இந்த மிருகத்திற்கு சாத்தான் சிங்காசனத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தான்.
வசனம் 13: 5,6 - பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசிற்று; 42 மாதங்கள் அதிகாரம் கொடுக்கப்பட்டது.
பெருமையானவை, தூஷணங்களை - உன்னதமானவருக்கு விரோதமாக பேசிற்று (தானியேல் 7:25). தோஷங்கள், தானியேல் 7:25 விளக்கத்தை பார்க்கவும்.
42 மாதங்கள் - தானியேல் 7:25ன் படி 42 மாதங்கள், ஒரு காலமும், காலங்களும், அரைக்காலம் இவைகள் சரிசமம். 42 மாதங்கள் = 1 (12 மாதங்கள்) வருடம் + 2 வருடங்கள் (12 மாதங்கள்) + 6 மாதங்கள்)
12+24+6 = 42 மாதங்கள்
வசனம் 13: 8 - உலகின் குடிகள் அனைவரும் அதனை வணங்குவார்கள்
வேறொரு மிருகம்:
வசனம் 13: 11 - மிருகம் பூமியில் இருந்து எழும்பிற்று, ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இருந்து வலுசர்ப்பதை போல பேசியது.
பூமியில் இருந்து வந்த மிருகம் - சமுத்திரத்தில் இருந்து வந்த மிருகம் அதிகம் மக்கள் தொகை என்றால், பூமி எம்பது குறைந்த மக்கள் தொகை உள்ள இடம். அதாவது இந்த மிருகம் குறைவான மக்கள் தொகை உள்ள இடத்தில இருந்து எழும்பியது
ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக - வேதத்தில் ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவை குறிக்கும். ஆட்டுக்குட்டியை போல இருந்து என்றால், இந்த மிருகம், அல்லது தேசம் எழும்பும் போது கிறிஸ்துவின் பண்புகளோடு இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல அது சாத்தானை போல பேசியது.
வசனம் 13: 12 - இந்த வேறொரு மிருகம் முந்தின மிருகத்தின் அதிகாரத்தை நடப்பித்தது. அதாவது இயேசு கிறிஸ்துவை போல இருந்ததில் இருந்து விலகி, சமுத்திரத்தில் இருந்து எழும்பின மிருகத்தின் தன்மைகளை நடப்பித்து, முதல் மிருகத்தை வணங்கும் படி செய்தது.
தேவனை மாத்திரமே, தேவனால் படைக்கப்பட்ட மனுக்குலம் வணங்க வேண்டும். இந்த மனுக்குலம் தேவன் சொல்லிய ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் வணங்க வேண்டும். ஆனால், தேவனை வணங்காமல் முந்தின மிருகத்தை வணங்கும் படி செய்தது. தானியே 7ல் சொன்னதை போல, அந்த முத்தின மிருகம் (அ) சின்ன கொம்பு பிரமாணங்களை மாற்றியது. மனுக்குலம் தேவனை ஏழாம் நாளில் தொழாமல், மிருகம் சொன்ன நாளில் தொழுதது. அதுவே மிருகத்தை வணங்கியது என்பதாகும்; ஏனென்றால், சமுத்திரத்தில் இருந்து வந்த மிருகம், இயேசு கிறிஸ்துவின் பெயரில் வருகிறது. இயேசு கிறிஸ்துவின் பெயரில் வருவதால், கிறிஸ்து சொன்னதாக மக்கள் நினைத்து அதனை வணங்கினார்கள்.
வசனம் 13: 16-18 - தேவனை தொழுவதற்கு பதிலாக, சமுத்திரத்தில் இருந்து வந்த மிருகத்தை, அநேகர் வணங்கினார்கள். அது சொன்னதை மக்கள் செய்தார்கள். அந்த மிருகம் சொன்னதை தரித்து கொள்ளுகிறவன், மிருகத்தின் முத்திரையை தரித்து கொள்கிறான். அந்த முத்திரை 666. 6 - என்பது மனிதன் ஆறாம் நாளில் படைக்கப்பட்டதால், மனித பண்புகளை குறிக்கும். 7 - என்பது தேவ பண்புகளை குறிக்கும்.
முத்தூது - வெளி 14: 6 - 12
இந்த அதிகாரத்தில் உள்ள முத்தூது, உலக வரலாற்றில் உள்ள மக்களுக்கு மையமாக உள்ள தூதுகள். இந்த முத்தூதில் உள்ள தூதர்கள் உலகத்தில் உள்ள எல்லாருக்கும் சொல்லும் தூதாகும். அதாவது, இந்த உலகில் வாழும் அனைவருக்கும் சொல்லப்படும் தூது என்பதால், இதுவே இயேசு கிறிஸ்து வருமுன் சொல்லப்படும் தூதுகள்.
இந்த தூது எச்சரிப்பின் தூது, அன்பின் தூது.
வெளிப்படுத்தலில் உள்ள அடையாளங்களில், தூதர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
தூதர்கள் - என்பது வேதத்தின் சாத்தியங்களை தூதாக எடுத்து செல்பவர்களை குறிக்கிறது.
முதல் தூதனின் தூது (வெளி 14: 6-7)
இந்த முத்தம் தூதன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து தூதை அறிவிக்கிறான். தூது என்னவென்றால் "தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்". இதுவே முதல் தூது.
தேவனுக்கு பயந்து மகிமை படுத்தவேண்டும். நியாயத்தீர்ப்பு வருகிறது என்று அல்லாமல், நியாயத்தீர்ப்பு வந்தது என்று சொல்கிறான். அப்படியானால் நியாய தீர்ப்பின் காலத்தில் வாழ்கிறோம். பரலோகத்தில் நியாயத்தீர்ப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரை எப்படி தொழுது கொள்வது? தேவனை தொழுகிறோம், உண்மைதான்; ஆனால் தேவன் கூறியதை போல தொழுகிறோமா? தேவன் எப்படி அவரை தொழ சொன்னார்?
யாத்திராகமம் 20: 6-11. பரிசுத்த ஓய்வு நாளாகிய ஏழாம் நாளில் தொழ வேண்டும். அந்த முழு நாளையும் தேவனுக்கென்று அர்ப்பணிக்க வேண்டும். 11 வசனம் சொல்கிறது "வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி" என்று. அதே வார்த்தையை தேவன் முதலாம் தூதன் மூலம் சொல்கிறார்.
வாரத்தின் ஏழாம் நாள் தொழுகையே, வேதத்தின் படி உள்ள தொழுகையாகும். இந்த தொழுகை தேவனை தொழுவதாகும்.
இரண்டாம் தூதனின் தூது (வெளி 14: 8)
வெளி 13: 2 - சிங்கத்தின் வாய் போல மிருகம் இருந்ததென்று கூறுகிறது. சிங்கம் என்பது பாபிலோன். பாபிலோன் சொல்லும் பாபிலோன் கொள்கைகளை, தேவன் சொன்னதற்கு எதிராக மற்றொரு நாளில் தோழா வேண்டாம் என்று தேவன் கூறுகிறார்; ஏனென்றால் "பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது!" என்று இரண்டாம் தூதன் கூறுகின்றான்.
பாபிலோன் விழுந்தது, தேவன் சபை என்றுமே நிலை நிற்கும், தேவன் என்றுமே நிலை நிற்பார் என்பதே இந்த இரண்டாம் தூதன் சொல்லும் கருத்து..
மூன்றாம் தூதனின் தூது (வெளி 14: 9-12)
இது ஒரு பயங்கரமான தூது. வெளி 13:16 ன் படி மிருகத்தை வணங்குபவர்கள், அதாவது மிருகத்தையாவது, மிருகத்தின் கொள்கைகளையாவது வணங்குபவர்களுக்கு மிருகத்தின் முத்திரை தரிக்கப்படுகிறது. "மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, .... அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
(10) மிருகத்தின் முத்திரையை தரித்தவர்களுக்கு, அதாவது தேவனின் முத்திரையை தரிக்காதவர்களுக்கு, தேவனுக்கு கீழ்ப்படியாதவர்களை தேவன் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் அழிக்கிறார்.
(12) ஆனால், தேவன் சொன்னதை போல தேவனை தொழுகிறவர்கள் இந்த வாதையில் இருந்து தப்பித்து கொள்கிறார்கள். இவர்கள் எப்படி தொழுது கொள்கிறார்கள் என்றால், தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்தார்கள். அதாவது ஏழாம் நாள் பரிசுத்த தேவனை தொழுதுகொள் என்ற கட்டளைக்கு கீழ்ப்படிந்தார்கள். அதாவது 10 கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தார்கள்.
10 கட்டளையில் ஒரு கட்டளையை மீறினாலும், நாம் தேவனுக்கு எதிராக பாவம் செய்வதாகும்.
யாக்கோபு 2: 10. எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
11. ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.
சுருக்கம்:
தேவனுடைய முத்திரையை தரித்து கொள்ளாதவன், மிருகத்தின் முத்திரையை தரித்து கொள்கிறான். அவன், தேவன் அனுப்பும் வாதைகளால் வாதிக்கப்பட்டு பரலோகத்தையும் இழக்கிறான். தேவனின் முத்திரை எது?
கடைசி 7 வாதைகள் - வெளி 15, 16
நாம் எல்லாருமே பரலோகத்தை நோக்கி பிரயாணம் போகிறோம் என்று நமக்கு தெரியும். ஆனால் எல்லாருமே பரலோகம் செல்வார்களா என்ற கேள்வி நம்மனதில் எப்போதுமே வருவதுண்டு. இஸ்ரவேலர்கள், எகிப்பில் அடிமைகளாய் இருந்தார்கள்; அவர்களை தேவன் விடுதலை செய்து கானான் கொண்டு சேர்க்க சித்தமாய் இருந்தார் தேவன். மோசே என்ற தேவதாசனின் மூலம் பார்வோனிடம் தேவன் பேசினார். பார்வோனோ தன இருதயத்தை கடினப்படுத்திக்கொண்டு இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து அவர்களை விடுதலை ஆக்கவில்லை.
தேவனிடம் சித்தத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும், அது வெற்றியாகாது என்பது நிச்சயம். தேவன் அந்த இஸ்ரவேல் மக்களை வெளியே கொண்டுவர, எகிப்தின் மீது 10 வாதைகளை அனுப்பினார். அந்த பத்தாவது வாதையில் இஸ்ரவே மக்களை, பார்வோன் எகிப்பதில் இருந்து போக விட்டான்; அதாவது தேவன் அந்த மக்களை பார்வோனிடம் இருந்து விடுதலை ஆக்கி கானான் கொண்டு சென்றார்.
இன்றைக்கு இருக்கும் இந்த உலகம் எகிப்பது. தேவனுடைய சித்தத்தை செய்ய முடியாமல், உலகத்திற்கு அடிமைகளாய் இருக்கிறோம். தேவன் இந்த உலகில் இருந்து நம்மை விருதை ஆக்கி அந்த பரம கானானுக்கு, அதாவது பரலோகிற்கு சென்று அவரோடு இருக்க வேண்டுமென்று விரும்புகின்றார். இயேசு கிறிஸ்து ஒருநாள் வந்து நம்மை எல்லாம், கூடி செல்வார்.
அவர் வருகைக்கு முன் நடப்பதே, தேவனிடம் இருந்து வரும் அந்த மகா கொடிதான் 7 வாதைகள்.
1. அந்த வாதைகள் யாருக்கு வருகிறது?
2. ஏன் வருகிறது?
3. அந்தத் வாதையின் தீவிரம் என்ன?
4. தேவ பிள்ளைகளுக்கு அந்த 7 வாதைகளில் பங்கு கொள்வார்களா?
5. 7 வாதைகள் என்னென்ன?
6. தேவனுடைய பிள்ளைகள் இந்த வாதைகளில் எப்படி பாதுகாக்கப்படுகின்றனர்?
7. தேவனுடைய முத்திரையை எது? அதனை எப்படி பெற்றுக்கொள்வது?
.... என்பதை பாப்போம்
1. அந்த வாதைகள் யாருக்கு வருகிறது?
வெளி 16:2-ன் படி, மிருகத்தின் முத்திரையை தரித்தவர்களும், அதின் சொரூபத்தை வணங்குபவர்களுக்கு அந்த வாதைகள் தேவனிடம் இருந்து ஊற்றப்படுகிறது.
2. ஏன் வருகிறது?
வெளி 16:2-ன் படி, மிருகத்தையும், அதின் சொரூபத்தையும் வணங்கியதால் அந்த வாதைகள் வருகிறது.
3. அந்தத் வாதையின் தீவிரம் என்ன?
வெளி 14: 9-11 படி, அந்த வாதை தேவனிடம் இருந்து வருகிறது. அந்த வாதை, பாபியில் உள்ள வாதைகளை விட கொடிதான் வாதை. அது கலப்பில்லாத வாதை, அதாவது தேவனுடைய இரக்கமும், கிருபையும் அந்த வாதையில் இல்லை. தேவனுடைய முத்தியையை பெற்றுக்கொள்ளாமல், மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்கியதால் அந்த வாதைகளை மனிதர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால், இவர்களுக்கு பரலோகம் கிடைக்காமல் முடிவாக "அக்கினியினாலும் கந்தகத்தினாலும்" தேவன் வாதிக்கிறார்.
இன்று உள்ள வாதைகள், சாத்தானும், மனிதன் செய்கிற தவறுகளால் வருகிறது. தேவன் தமது இயக்கத்தினால், இதனை குணமாக்குகிறார். ஆனால், படைத்த தேவனே வாதைகளை அனுப்பும் பொது, யார் நிற்க முடியும்?
4. தேவ பிள்ளைகளுக்கு அந்த 7 வாதைகளில் பங்கு கொள்வார்களா?
வெளி 16:2, வெளி 14: 12, வெளி 15: 2 - மிருகத்தின் முத்திரையை பெற்றுக்கொள்ளாமல், ஜெயம் கொண்டவர்கள் (அதாவது மிருகத்தின் முத்திரையை பெறாதவர்கள் தேவா முத்திரையை பெற்று கொள்கின்றனர்) அந்த வாதைகளில் பங்கு இல்லை.
5. 7 வாதைகள் என்னென்ன?
வெளி 15, 16 - கடைசி ஏழு வாதைகளை பற்றி கூறுகிறது.
முதல் வாதை (வெளி 16: 2):
முதல் கலசத்தில் உள்ளதை பூமியின் மேல் தூதன் ஊற்றினான். அப்போது "மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று". இது தோல் நோய் அல்லது தொற்றுநோயால் ஏற்படும் என்று தோன்றுகிறது.
இரண்டாம் வாதை (வெளி 16: 3):
இரண்டாம் தூதன் கலசத்தில் உள்ளதை சமுத்திரத்தில் ஊற்றினான்; சமுத்திரம் இரத்தமாகி, அதில் உள்ள எல்லா உயிர்களையும் அழித்துவிடும். கடல்வாழ் உயிரினங்களின் மரணம் மில்லியன் கணக்கான மக்களின் முக்கிய உணவு ஆதாரத்தை அழித்து விடும்.
மூன்றாம் வாதை (வெளி 16: 4-7):
மூன்றாவது தூதன் கலசத்தில் உள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றிய பிறகு, நதிகள், நீரூற்றுகள் இரத்தமாக மாறுகிறது. இந்த வாதை நல்ல நீரில் உள்ள மீன்களை அழித்துவிடும் - மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு விநியோகத்தை மேலும் பாதிக்கப்படும்.
நான்காம் வாதை (வெளி 16: 8-9):
நான்காவது தூதன் கலசத்தில் உள்ளதை சூரியன் மேல் ஊற்றினான். சூரியன் மனுஷர்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறது, ஆனாலும் மக்கள், தேவனை அதிகமாக தூஷிக்கிறார்கள்.
ஐந்தாம் வாதை (வெளி 16: 10-11):
இந்த தண்டனை இருள், வலி மற்றும் புண்களை கொண்டு வரும். புண்கள், தன்னாளுடைய வலி மிகவும் அதிகமாகிறது. இந்த நிலையிலும் தேவனை தூஷிக்கின்றனர்.
ஆறாம் வாதை (வெளி 16: 12-16):
நதி மனிதர்களை வாழ வைக்கும். ஐப்பிராத்து நதி வற்றிப்போவது என்பது, ஆவிக்குரிய வழியில், மிருகத்தின் முத்திரையை தரித்த மக்கள் ஒருவருக்கொருவர் அவர்களுடைய உதவியை மிருகத்திற்கும், அதன் கூட்டாளிகளும் விலக்கி கொள்கின்றனர் என்பதாகும்.
ஏழாம் வாதை (வெளி 16: 17-21):
இந்த இறுதி வாதையானது "இரைச்சல்கள் மற்றும் இடிமுழக்கங்கள் மற்றும் மின்னல்கள்" மற்றும் "மனிதர்கள் பூமியில் இருந்ததிலிருந்து ஏற்படாத பெரிய மற்றும் பெரிய பூகம்பம்" (வசனம் 18) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பாபிலோனின் கொள்கைகள் கொண்ட மகா பாபிலோன், அதற்க்கு துணை போன சபைகளும் வீழ்ச்சியடைந்தது (வசனம் 19, வெளிப்படுத்துதல் 18:2 உடன் ஒப்பிடவும்) மேலும் அங்கு பேரழிவு தரும் ஆலங்கட்டி மழை பெய்யும், தாலந்து நிறையான எடையுள்ள பெரிய கல்மழை, மிருகத்தையும் அதின் முத்திரையை தரித்த மக்களையும் அழிக்கிறது. இது மகா கொடிதான வாதை.
யோபு 38:
22.உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ?
23.ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.
6. தேவனுடைய பிள்ளைகள் இந்த வாதைகளில் எப்படி பாதுகாக்கப்படுகின்றனர்?
தேவன் தாமே மிருகத்தின் முத்திரையை தரித்தவர்களுக்கு வாதைகளை அனுப்புவதால், தேவ முத்திரையை தரித்த தம்முடைய பிள்ளைகளை பத்திரமாக பாதுகாக்கிறார்.
ஒரு சில தேவ வாக்குத்தத்தங்கள்...
சங்கீதம் 91
1. உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
5. இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,
6. இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
7. உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
ஏசாயா 26
20. என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.
21. இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
7. தேவனுடைய முத்திரையை எது? அதனை எப்படி பெற்றுக்கொள்வது?
தேவனுக்கு கீழ்ப்படியும்போது தேவனுடைய முத்திரையை பெற்றுக்கொள்கிறோம். தேவனுடைய முத்திரை என்றால் என்ன? இங்கே click செய்யவும்
மிருகத்தின் முத்திரை
வெளிப்படுத்தின விசேஷம் அநேக முத்திரைகளை பற்றி சொன்னாலும் மிருகத்தின் முத்திரையை பற்றியும் விசேஷமாக சொல்கிறது.
வெளி 13 ம் அதிகாரம் முழுவதும் படிக்கும் பொது, அது இரண்டு மிருகங்களை (முதல் மிருகம், இரண்டாம் மிருகம்) பற்றி பேசுகிறது. மிருகம் என்பது அருமையான அடையாள வார்த்தை.
மிருகம் என்பது - ராஜாவையும், ராஜ்யத்தையும் குறிக்கும் (தானியேல் 7: 3, 17)
இரண்டு மிருகத்தை குறித்து பேசும்போது, அது இரண்டு ராஜ்யங்களை குறிக்கும். வெளி 13: 15-18 படிக்கும் பொது, இங்கு மிருகத்தின் முத்திரையை பற்றி தேவன் சொல்லுகிறார். மிருகத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள், மிருகத்தின் முத்திரையை பெற்றுக்கொள்கிறார்கள் என்று வேதம் சொல்கிறது.
மிருகத்தின் முத்திரை என்னவென்று பார்க்குமுன், தேவனுடைய முத்திரை எது என்று தெரிந்து கொண்டால், மிருகத்தின் முத்தியை எது என்று அடையாளப்படுத்திக்கொள்ளலாம். சாத்தான், எப்போதுமே தேவனுக்கு எதிராக செயல்படக்கூடியவன். தேவன் ஒன்றி சொல்லும் பொது, தேவன் சொன்னதிற்கு எதிராக (ஆங்கிலத்தில் duplicate) வேறொன்றை செய்யக்கூடியவன்.
வேதம் தேவனுடைய முத்திரையை பற்றி தெள்ளத்தெளிவாக சொல்கிறது. உதாரணமாக எசேக்கியேல் 20:12, யாத்திராகமம் 31:13 ல், தேவனுக்கும் நமக்கும் அடையாளமே, தேவன் கொடுத்த பரிசுத்த ஓய்வு நாள். பரிசுத்த ஓய்வு நாள் என்று சொல்லும் போது, வாரத்தின் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் நாம் தேவனை தேவன் சொன்னபடி அவரை தொழுது கொள்ளும்போது, தேவன் அவரின் முத்திரையை தரிப்பிக்கிறார்.
தேவனுக்கு எதிரான சாத்தான், மிருகத்தின் மூலம், மிருகத்திற்கு கீழ்ப்படிபவர்களுக்கு முத்திரையை தரிப்பிக்கிறான், அதுவே மிருகத்தின் முத்திரை.
தேவனை தேவன் சொன்ன ஓய்வு நாளில் தொழுதுகொள்ளும்போது தேவனுடைய முத்திரையை பெற்றுக்கொள்கிறோம். தேவன் சொன்னதிற்கு எதிராக செய்யும் பொது, மிருகத்தின் முத்திரையை பெற்றுக்கொள்கிறோம்.
இந்த மிருகத்தின் முத்திரையை தரித்தால், தேவனுடைய வாதைகள் நிச்சயம் என்று வெளி 14:9-11 வரை சொல்கிறது.
எது உண்மையான சபை? வேதம் என்ன சொல்கிறது?
வேதத்தின் படி ஸ்திரீ என்பது சபையை குறிக்கிறது.
வெளி 12: 1
II கொரிந்தியர் 11 :2
எரேமியா 6:2
ஏசாயா 51: 16
வேதத்தின் உண்மையான சபையின் அடையாளம் என்ன?
வெளி 12
17. அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
வலுசர்ப்பம் - சாத்தான்
ஸ்திரீ - சபை
வலுசர்ப்பமாகிய சாத்தான், ஸ்திரீயின் மேல் கோபம் கொள்கிறான், எதற்கு? ஏனென்றால், இந்த இஸ்திரீ தேவனுடைய கற்பனைகளையும், இயேசு கிறிஸ்துவை சாட்சியாக பிரசிங்கிக்கிறாள்.
வேதம் சொல்லும் இந்த ஸ்திரீக்கு இரண்டு குணங்கள் இருக்கிறது.
1. தேவனுடைய 10 கட்டளைகளுக்கு கீழ்ப்படிக்கிறாள்
2. இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக்கொண்டு, அவருக்கு சாட்சியாக வாழ்கிறாள்
அதாவது, இந்த ஸ்திரீ, தேவனின் கட்டளைகளாகிய 10 கட்டளைகளையும் கைக்கொள்கிறாள்; அதாவது 10 கட்டளைகளில் உள்ள 4ம் கட்டளையாகிய வாரத்தின் ஏழாம் நாளாகிய (வாரத்தின் ஏழாம் நாள்: சனிக்கிழமை) ஓய்வு நாளில் ஆராதிப்பாயாக என்ற கட்டளைக்கும் கீழ்ப்படிகிறவளாக இருக்கிறாள். அதாவது தேவன் கொடுத்த கட்டளைகளில் உள்ள 10 கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறவளாக இருக்கிறாள். இதுவே மெய்யான திருச்சபை என்று வேதம் சொல்கிறது. இந்த 10 கட்டளைகளில் ஒன்றை கைக்கொள்ளவில்லை என்றாலும், தேவனுடைய கட்டளைகளை மீறுகிறோம் (யாக்கோபு 2: 10, 11) என்று வேதம் சொல்கிறது.