top of page
10. கர்த்தருக்கு காத்திருந்து
கர்த்தருக்கு காத்திருந்து
கழுகு போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து,
நீ உயரே எழும்பிடுவாய்
புது பெலன் அடைந்திடுவாய் நீ(4)
தாகம் உள்ளவன் மேல்
ஆவியை ஊற்றிடுவார்
வறண்ட நிலத்தின் மேல்
தண்ணீரை ஊற்றிடுவார்
- புது பெலன் அடைந்திடுவாய் நீ(4)
கர்த்தரில் பெலனடைந்து
பாக்கியம் பெற்றிடுவோம்
பெலத்தின் மேல் பெலனடைந்து
சீயோனில் சேர்ந்திடுவோம்
- புது பெலன் அடைந்திடுவாய் நீ(4)
bottom of page