top of page

101. மெய் ராஜா கிறிஸ்து

மெய் ராஜா கிறிஸ்து நாதர்

மா தயை காட்டவும்

சன்டாள மாந்தராலே

தள்ளுண்ட போதிலும்

வந்தரசாளுங் காலம்

சமீப மாயிற்றே!

ராஜரீக நல்ல காலம் வருமே!


ராஜரீக நல்ல காலம் சமீபமாயிற்றே!

ஏசு மாட்சி மேன்மையோடு

ப்ரசன்னமாகவே,

ஜோதிக் காட்சி கண்டு,

பூத்த கண் யாவும் குளிரும்;

ராஜரீக நல்ல காலம் வரட்டும்!


வின் ஜோதி ஒளி வீச,

மெய் தேவ பக்தரும்

கெம்பீர கோலத்தோடு

கொண்டாட்டம் செய்யவும்

நல்மீட்பர் மாண்பைப் பார்த்து

கண் யாவும் குளிரும்;

ராஜரீக நல்ல காலம் வரட்டும்!


எப்பாடும் நோவும் இன்றி

ஆனந்தம் அடைவோம்;

மாசற்ற நெஞ்சத்தோடு

ஓயாமல் போற்றுவோம்.

மா ராஜ சந்நிதானம்

நின்றாட்சி செய்யவும்;

ராஜரீக நல்ல காலம் வரட்டும்!


பேர் வாழ்வின் காலம்

வர ப்ரயாசப்படுவோம்

நன்னெறி தவறாமல்

முன்சென்று தேறுவோம்;

தீயோரும் குணம் மாற

எப்போதும் முயல்வோம்;

ராஜரீக நல்ல காலம் வரட்டும்!

bottom of page