top of page

103. என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் 

என்ன என் ஆனந்தம்

சொல்லக் கூடாதே

மன்னன் கிறிஸ்து என் 

பாவத்தை எல்லாம்

மன்னித்து விட்டாரே


கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்

மகிழ் கொண்டாடுவோம்

நாடியே நம்மைத் தேடியே வந்த

மன்னனை போற்றிடுவோம்

- என்ன என் ஆனந்தம் 


பாவங்கள் சாபங்கள் கோபங்கள் 

எல்லாம் பரிகரித்தாரே

தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து

தேற்றியே விட்டாரே

- என்ன என் ஆனந்தம் 


அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை 

எங்களுக்கு அருளிதனாலே

நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி

பகரவேண்டியதே

- என்ன என் ஆனந்தம் 


வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் 

மேல்வீட்டில் ஜெய கொடியுடனே

மண்ணுலகில் வந்து விண்ணுலகிற் சென்ற

மன்னனைத் தோத்தரிப்போம்

- என்ன என் ஆனந்தம் 

bottom of page