top of page
106. நீ உயிரைப் பெற
நீ உயிரைப் பெற
நான் ரத்தம் சிந்தினேன்;
நீ மீட்பை அடைய,
நான் விலையாகினேன்;
என் ஜீவன் நான் தந்தேன்,
நீ என்னத்தைத் தந்தாய்?
சதாகால இன்பம்
நீ பெற்று வாழ்ந்திட,
இவ்வுலகின் துன்பம்
வந்தேன் சகித்திட!
அநேக காண்டாய்ப் பட்டேன்
ஓர் நாள் நீ தந்தாயா?
மகத்வ நிலைமை உனக்காய்
நான் விட்டேன்;
உலகில் வாதையை
உனக்காய்ச் சகித்தேன்;
தந்தேனே நானென்னை
நீ என்னத்தைத் தந்தாய்?
உன் ஜீவன் தத்தஞ்செய்,
உன் நேச மீட்பர்க்காய்;
பூலோக வாழ்வு பொய்.
ஜீவி நித்தியத்திற்காய்;
குப்பை உலகெல்லாம்
அவரைப் பின் செல்லு.
bottom of page