107. என்னை மறவா இயேசு நாதா
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே
- என்னை மறவா இயேசு நாதா
பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலா தெவருமென்னை
- என்னை மறவா இயேசு நாதா
தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே
- என்னை மறவா இயேசு நாதா
திக்கற்றோராய் கைவிட மாட்டேன்
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே
- என்னை மறவா இயேசு நாதா
என்னை தொடுவேன் உம் கண்மணியை
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே
- என்னை மறவா இயேசு நாதா
எனக்எனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாது என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக் கொடியே
- என்னை மறவா இயேசு நாதா