11. அல்லேலூயா கர்த்தரையே
அல்லேலூயா கர்த்தரையே
ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம்
பார்த்தோரை துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும்
வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும்
இயேசுவைத் துதியுங்கள்
ராஜாதி ராஜனாம் இயேசுராஜன்
மறுபடி வருகின்றாரே
அல்லேலூயா அல்லேலூயா
தேவனை துதியுங்கள்
தம்புரோடும், வீணையோடும்
கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப்
போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும்
முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர்
இயேசுவைத் துதியுங்கள்
- ராஜாதி ராஜனாம் இயேசுராஜன்
பிள்ளைகளே, வாலிபரே!
தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே
கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே, பிரபுக்களே!
தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய்
செலுத்தியே துதியுங்கள்
- ராஜாதி ராஜனாம் இயேசுராஜன்
ஆழ்கடலே, சமுத்திரமே!
தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள்
எழும்பினார்; துதியுங்கள்,
தூதர்களே, முன்னோடிகளே!
தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை பரிசுத்தரால்
நிரப்புவார் துதியுங்கள்
- ராஜாதி ராஜனாம் இயேசுராஜன்