top of page
110. வந்தாளுமே எந்நாளுமே
வந்தாளுமே எந்நாளுமே,
உன் நாமமே என் தாபமே
இந்நேரமே கண்பாருமே
என் மேசையா உன் ஆசையைக்
கொண்டோசையாய் நான் பேசவே
உன் ஆசி தா நல் நேசமாய்
இப்பாரிலே உன் பேரையே
தப்பாமலே நான் பாடியே
எப்போதுமே கொண்டாடுவேன்
சத்துருக்கள் சதி செய்ய
நித்தமுமே என்னை நெருக்குகிறார்
அத்தனே நான் அடைக்கலம்
தேவாவியே வரந்தாரும்,
இப்பாவியின் பாவம் தீரும்
உம் ஜோதியின் ஒளி வீசும்
bottom of page