top of page

112. என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்

ஏற்று கொள்ளும் இயேசுவே


அன்னை தந்தை உந்தன் 

சன்னதி முன்னின்று

சொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது

- என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்


அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்

அடிமைத் தனத்தினின்றும்

சொந்த ரத்தக் கிரயத்தால் என்னை மீட்ட

எந்தையே உந்தனுக்கிதோ 

படைக்கிறேன்

- என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்


ஆத்ம சரீரமதை உமக்கு

ஆதீனமாக்கி வைத்தேன்

பாத்ரமாய் அதைப் பாவித்துக் கொள்ளவே

காத்திருக்கிறேன் கருணை செய் என் தேவா

- என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்


நீதியினாயுதமாய் அவயவம்

நேர்ந்து விட்டேனுமக்கு

ஜோதி பரிசுத்தராலயமாகவே

சொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை

- என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்

bottom of page