top of page
114. ஏசுவுடன் சுகமாகவே செல்வேன்
ஏசுவுடன் சுகமாகவே செல்வேன்,
எங்கேயும் அவர் என்னை நடத்தட்டும்,
ஏசு இல்லா ஸ்தலம் ஏது வாயினும்,
எச்சந்தோஷமும் பறந்தே போய்விடும்.
எங்கேயும், எங்கேயும் பயம் அறியேன்;
ஏசுவுடன் சுகமாகவே செல்வேன்.
ஏசுவுடன் எங்கேயும் தனித்தல்ல.
என் நன்பர்கள் என்னை
விட்டுப் போனாலும்,
ஏது காட்டில் என்னைக்
கொண்டு போனாலும்;
ஏசுவுடன் எல்லா சந்தோஷமுண்டே.
ஏசுவுடன் எவ்விடமும் தூங்கலாம்.
சாவின் நிழல் என்னை மூடுகையிலும்,
ஏக்கம் நீங்கி எழும்புவேன் நிச்சயம்,
ஏசுவுடன் இன்ப வீட்டில் வாழுவேன்.
bottom of page