top of page
12. கூடி மீட்பர் நாமத்தில்
கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்;
ஏசுவை இந்நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்
ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!
இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார்
- ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்;
வாக்குப்படி என்றைக்கும்
ஏசு நம்மோடிருப்பார்
- ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
வாக்கை நம்பி நிற்கிறோம்
அருள் கண்ணால் பாருமே;
காத்துக் கொண்டிருக்கிறோம்
வல்ல ஆவி வாருமே
- ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
bottom of page