top of page
122. ஆ! யெமக்காய் நல்
ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளை
அன்பாய் அமைத்தார் என்பரனார்.
பூமியின் சோலையில்
ஓய்வு கொள்ள
பூலோக மீட்பரைப்
போற்றிக் கொள்ள
- ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளை
ஆறுதல் பக்தியும் ஆவி மழை
அன்பையெம்மை நினைத்திடவும்
தேறுதல் கொண்டே ஓய்வு நாளை
திறமாய் நலமாய் ஆசரிப்போம்
- ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளை
ஆவியின் பேரருள் வேண்டிடுவோம்;
ஆனந்தம்! பேயினை வென்றிடுவோம்;
சாவை வென்று போனவரைச்
சாற்றிப் போற்றிப் பாடிடுவோம்
- ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளை
என்னென்ன சோதனை வந்திடினும்
ஏற்பாய் ஓய்வு காத்திடவும்
மன்னனாம் தேவனின் கட்டளையை மன்னன்
சொற்படி கைக்கொள்ளுவோம்
- ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளை
சுவாமி! நின் தாசரை நோக்கிப் பாரும்;
பிள்ளைகளென்றே எண்ணிக் காரும்;
பரலோக ஓய்வில் களி கூர
பரிசுத்த சபையாய்க் காத்துக்கொள்ளும்.
- ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளை
bottom of page