top of page
123. அதி மங்கல காரணனே
அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே - நரர்
வாழ விண் துறந்தோர்
ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!
- அதி மங்கல காரணனே
மதி மங்கின எங்களுக்கும், திதி
சிங்கினர் தங்களுக்கும் - உனின்
மாட்சியும், திவ்விய காட்சியும்
தோன்றிட வையாய், துவங்கவனே!
- அதி மங்கல காரணனே
முடி மன்னர்கள் மேடையையும், மிகு
உன்னத வீடதையும் - எண்ணா
மாட்டிடையே பிறந் தாட்டிடையர்
தொழ, வந்தனையோ தரையில்?
- அதி மங்கல காரணனே
தீய - பேய்த்திரள் ஓடுதற்கும், உம்பர்
வாய்த்திரள் பாடுதற்கும் - உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்தற்கும்
பெற்ற நல் கோலம் இதோ!
- அதி மங்கல காரணனே
bottom of page