top of page
129. கலிலேயரே கலிலேயரே
கலிலேயரே கலிலேயரே
ஏன் பார்த்து நிற்கிறீர்கள்?
வானத்தை ஏன் பார்த்து நிற்கிறீர்கள்?
வானத்திற்கேறினவர் இறங்கி வந்திடுவார்
இதோ அவர் வருகிறார் (5)
தாதர் படை சூழ்ந்திட
துயரமதை நீக்கிட
தயவாய் தாமதமின்றியே
இதோ அவர் வருகிறார் (2)
சுவிசேஷம் அறிவிக்கப்படுகின்றது
சுவிசேஷகர் கூட்டம் பெருகுகின்றது
எல்லா அடையாளம் நிறைவேறுது
இயேசுவின் வருகை இதோ சமீபம்
- இதோ அவர் வருகிறார்
எக்காள தொனியோடே வந்திடுவார்
எல்லோரும் கண்டிட தோன்றிடுவார்
ஆரவார தொனி கேட்கின்றதே
ஆயத்தமா நீயும் ஆயத்தமா?
- இதோ அவர் வருகிறார்
பின்மாரி பெறுகின்ற வேளையிது
முத்திரை தரித்திடும் நேரமிது
பாவத்தை விட்டோடும் காலமிது
பரிபூரணம் அடையும் சமயமிது.
- இதோ அவர் வருகிறார்
bottom of page