13. அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 

திரளாய் நிற்கும் யார் இவர்கள்? 

சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில், 

அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 


எல்லா ஜாதியார், எல்லாக் கோத்திரம், 

எல்லா மொழியும் பேசும் மக்களாம், 

சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் 

சீர் போராட்டம் செய்து முடித்தோர்!

- அழகாய் நிற்கும் யார் இவர்கள்?


வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு,

வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து,

ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்

ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று

- அழகாய் நிற்கும் யார் இவர்கள்?


ஆட்டுக்குட்டிதான் இவர் கண்ணீரை 

அற அகற்றித் துடைத்திடுவார், 

அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே 

அள்ளிப் பருக இயேசு உன்னையே 

- அழகாய் நிற்கும் யார் இவர்கள்?


ஆதிபிதாவே, ஆட்டுக்குட்டியே 

தூய ஆவியே, துதி ஸ்தோத்திரம் 

கன்மகிமை பெலன் வல்லமை 

என்றென்றைக்குமே உம்முடையதே 

- அழகாய் நிற்கும் யார் இவர்கள்?