133. புதிய பாடல் பாடி பாடி இயேசு

புதிய பாடல் பாடி பாடி இயேசு

ராஜாவைக் கொண்டாடுவோம்

புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு

ராஜாவைக் கொண்டாடுவோம்


கழுவினார் இரத்தத்தாலே

சுகம் தந்தார் காயத்தாலே

தேற்றினார் வசனத்தாலே

திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு


உறுதியாய் பற்றிக் கொண்டோம்

உம்மையே நம்பி உள்ளோம்

பூரண சமாதானம்

புவிதனில் தருபவரே – தினமும்


அதிசயமானவரே

ஆலோசனைக் கர்த்தரே

வல்லமை உள்ள தேவா

வரங்களின் மன்னவனே – எல்லா