top of page

135. மகிமையின் நம்பிக்கை

மகிமையின் நம்பிக்கையே

மாறிடாத என் இயேசய்யா

உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்

உலகத்தில் வெற்றி கொண்டேன்.


துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து

தூயவர் உம்மை நான் பாடுவேன்


ஆத்துமாவின் நங்கூரமே

அழிவில்லாத பெட்டகமே

நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற

நிம்மதியின் கன்மலையே


பள்ளத்தாக்கில் நடந்தாலும்

பயமில்லை பாதிப்பில்லை

உம் கரலோ கேட்குதய்யா

உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதய்யா


நல்மோய்ப்பரே நம்பிக்கையே

நானும் உந்தன் ஆட்டுக்குட்டி

உம்மைத்தானே பின் தொடர்ந்தேன்

உம் தோளில்தான் நானிருப்பேன்.


பிரகாசிக்கும் பேரொளியே

விடிவெள்ளி நட்சத்திரமே

உம் வசனம் ஏந்திக்கொண்டு

உலகெங்கும் சடர்விடுவேன்

bottom of page