136. வாதை உந்தன் கூடாரத்தை

வாதை உந்தன் கூடாரத்தை

அணுகாது மகனே

பொல்லாப்பு நேரிடாது

நேரிடாது மகளே


உன்னதமான கர்த்தரையே

உறைவிடமாக்கிக் கொண்டாய்

அடைக்கலமாம் ஆண்டவனை

ஆதாயமாக்கிக் கொண்டாய்


ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்

சாத்தானை ஜெயித்து விட்டோம்

ஆவி உண்டு வசனம் உண்டு

அன்றாடம் வெற்றி உண்டு


கர்த்தருக்குள் நம் பாடுகள்

ஒரு நாளும் வீணாகாது

அசையாமல் உறுதியுடன்

அதிகமாய் செயல்படுவோம்ப